ஒலக்கூர் ரயில்வே மேம்பால இறுதிக்கட்டப்பணிகள் தீவிரம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஒலக்கூர் ரயில்வே மேம்பால இறுதிக்கட்டப்பணிகள் தீவிரம்

Added : மார் 23, 2020
Share

திண்டிவனம்: திண்டிவனம் அருகே ஒலக்கூரில் ரயில்வே மேம்பாலப்பணிகள், வரும் ஏப்ரல் மாத இறுதியில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் உள்ள ரயில்வே கேட்கள் அனைத்தையும் அப்புறப்படுத்திவிட்டு, அந்த இடத்தில் மேம்பாலம் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அதன்படி, ரயில்வே லைனுக்கு மேல்பகுதியில் பாலம் கட்டும் பணியை ரயில்வே துறையும், மற்ற பகுதி பணிகளை மாநில நெடுஞ்சாலைத்துறையும் தனித்தனியே மேற்கொண்டு வருகிறது.இதேபோல் திண்டிவனம் அருகே 15 கி.மீ., தொலைவில் உள்ள ஒலக்கூர் ரயில்வே கேட் பகுதியில் 21 கோடி ரூபாய் செலவில், ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டது.கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்பே, ரயில்வே லைனுக்கு மேல் உள்ள பகுதியில் பாலம் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால் மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில், எந்தவித பணிகளும் நடைபெறாமல், கிடப்பில் போடப்பட்டது.ரயில்வே மேம்பாலப் பகுதியில் நிலங்கள் அதிகளவில் இருந்தது.இந்த நிலங்களை அரசு கையகப்படுத்துவதில் கால தாமதம் ஏற்பட்டது. இதனால், பாலம் கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கடந்த 2018ம் ஆண்டு, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், நில உரிமையாளர்களிடம் இருந்து நிலம் கையகப்படுத்தி முடிக்கப்பட்டது.இதன் தொடர்ச்சியாக, மாநில நெடுஞ்சாலைத்துறை மூலம் பாலம் கட்டும் பணிகள் துவங்கி நடந்து வருகிறது. ஒருபகுதியில் பாலம் கட்டி முடிக்கப்பட்டு விட்டது. மற்றொருபுறம் பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது.இது தவிர பாலம் கட்டும் பணிக்கு இடையூறாக இருந்த கோவில் நேற்று முன்தினம் ஜேசிபி., இயந்திரம் மூலம் அப்புறப்படுத்தப்பட்டு விட்டது. வரும் ஏப்ரல் மாத இறுதிக்குள் அனைத்து பணிகளையும் முடிந்து விடும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X