வெளிமாநில நான்கு சக்கர வாகனங்கள் புதுச்சேரிக்குள் நுழைய தடை | Dinamalar

இந்தியா

வெளிமாநில நான்கு சக்கர வாகனங்கள் புதுச்சேரிக்குள் நுழைய தடை

Added : மார் 23, 2020
Share

புதுச்சேரி: வெளிமாநிலங்களை சேர்ந்த நான்கு சக்கர வாகனங்கள் வரும் 31ம் தேதிவரை புதுச்சேரிக்குள் நுழைய தடை விதித்து முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:கொரோனா தொற்று நோய் பரவுவதை தடுப்பதற்காக சுயகட்டுப்பாட்டுடன் கூடிய ஊரடங்கு உத்தரவின் வேண்டுகோளை ஏற்று புதுச்சேரி மக்கள் சிறப்பாக கடைபிடித்ததற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதே சமயம் வேகமாக பரவும் நிலையில் உள்ள இந்த கொரோனா நோயை முற்றிலும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் இருந்து தடுப்பதற்காக இன்று 23ம் தேதி முதல் வரும் 31ம் தேதி வரை வெளிமாநில நான்கு சக்கர வாகனங்கள் புதுச்சேரி யூனியன் பிரதேச எல்லைக்குள் நுழைய தடை விதிக்க பட்டுள்ளது.ஆனால் உள்ளூர் வாகனங்கள் அதாவது இன்ட்ரா ஸ்டேட் பெர்மிட் உள்ள வாகனங்கள் புதுச்சேரி யூனியன் பிரதேசம் முழுவதும், அதாவது புதுச்சேரியில் இருந்து பாகூர், நெட்டப்பாக்கம், மதகடிப்பட்டு, திருக்கனுார், காலாப்பட்டு போன்ற பகுதிகளுக்கும், காரைக்காலில் இருந்து அம்பகரத்துார், விழுதியூர் போன்ற பகுதிகளுக்கும் வாகனங்கள் செல்லும். மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் இண்டர் ஸ்டேட் வாகனங்களுக்கு புதுச்சேரி யூனியன் பிரதேச எல்லைக்குள் நுழைய அனுமதி இல்லை.பொதுமக்கள் முக்கியமான காரணமின்றி வெளி இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். அரசு எடுக்கும் கொரோனா நோய் தடுப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கைளுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.இவ்வாறு செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.1. அரசு வாகனங்கள்2. பால்3. உணவு பொருட்கள்4. காய்கறிகள்5. மருந்து6. மருத்துவ உபகரணங்கள்இந்த பொருட்களை கொண்டு வரும் வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கும் இந்த தடையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X