இந்தியா

வெறிச்சோடிய சுற்றுலா தளங்கள்; 30 ஆண்டுகளுக்கு முந்தைய புதுச்சேரியை நினைவுப்படுத்தியது 

Added : மார் 23, 2020
Share
Advertisement
 வெறிச்சோடிய சுற்றுலா தளங்கள்; 30 ஆண்டுகளுக்கு முந்தைய புதுச்சேரியை நினைவுப்படுத்தியது 

புதுச்சேரி: புதுச்சேரியில் நேற்று நடந்த மக்கள் ஊரடங்கால், சுற்றுலா தளங்கள் வெறிச்சோடி, கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் நடமாட்டம் இன்றி இருந்த புதுச்சேரியை நினைவுப்படுத்தியது.

புதுச்சேரியின் மொத்த மக்கள் தொகை 13 லட்சத்தை தாண்டியுள்ளது. சுற்றுலா தளமாக விளங்கும், புதுச்சேரியின் அழகை ரசிக்க, பல நாடுகள், மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளின் வருகின்றனர். தற்போது கொரோனா வைரஸ் காரணமாக, புதுச்சேரியின் அனைத்து சுற்றுலா தளங்கள் மூடப்பட்டுள்ளது. நேற்று மக்கள் ஊரடங்கு காரணமாக, எப்பொழுதும் பரபரப்பாக காட்சி அளிக்கும் அரவிந்தர் ஆசிரமம், மணக்குள விநாயகர் கோவில், கடற்கரைச் சாலை, நோணாங்குப்பம் படகு குழாம், ஆரோவில் உள்ளிட்ட சுற்றுலா தளங்கள் வெறிச்சோடி கிடந்தது.எப்பொழுதும் பிசியாக இருக்கும் புதுச்சேரியின் ஒயிட் டவுன், மார்கெட், காந்தி வீதி, நேரு வீதிகள், மக்கள் நடமாட்டம் இல்லாத கடந்த 30 ஆண்டுகளுக்கு முந்தைய புதுச்சேரியை நினைவுப்படுத்தியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X