பொது செய்தி

தமிழ்நாடு

லொக்... லொக்... வந்தால் கடைசி 'சீட்'டில் அமரவும்!

Added : மார் 23, 2020
Share
Advertisement

கோவை:அரசு பஸ்களில், பயணிகளுக்கு, 'கொரோனா' தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்திய பிறகு, இயக்க டிரைவர், கண்டக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.'கொரோனா' தடுப்பு நடவடிக்கையாக பஸ் ஸ்டாண்ட்களிலும், பஸ்களிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. தவிர, போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு 'மாஸ்க்' வழங்கப்பட்டு உள்ளதுடன், பயணிகளிடம் துண்டுபிரசுரங்கள் வாயிலாக, விழிப்புணர்வு ஏற் படுத்தப்படுகிறது.பயணிகளிடம் 'கொரோனா' வைரஸ் தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்திய பிறகே, பஸ்களை இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது.அதன்படி, 'பயணிகள் யாருக்காவது சளி, இருமல், காய்ச்சல், மூச்சுவிட சிரமம் இருந்தால் முடிந்தவரை கடைசி இருக்கையை பயன்படுத்தலாம்.தும்மல் மற்றும் இருமல் வரும்போது, கண்டிப்பாக 'கர்ச்சீப்' அல்லது, 'டவல்' பயன்படுத்தவும். தேவையற்ற பயணத்தை தவிர்க்கவும். வீட்டுக்கோ அல்லது அலுவலகத்துக்கோ சென்ற பின், சோப்பு போட்டு கைகளை சுத்தமாக கழுவவும்.கண், காது மூக்கு போன்றவற்றை தொடுவதை தவிர்க்கவும். குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்ளவும்' என்பன போன்ற விழிப்புணர்வு வாசகங்களை தெரிவித்த பிறகு, டிக்கெட் வழங்கப்படுகிறது.இது தொடர்பான சுற்றறிக்கை, அனைத்து கிளை மேலாளர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X