தமிழ்நாடு

கைகளை சோப்பால் கழுவியபடி சங்கிலியை உடைப்போம்!..வீட்டுக்குள் தனியாக இருந்தபடி!

Updated : மார் 23, 2020 | Added : மார் 23, 2020
Share
Advertisement
 கைகளை சோப்பால் கழுவியபடி சங்கிலியை உடைப்போம்!..வீட்டுக்குள் தனியாக இருந்தபடி!

கோவை:கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து, பொதுமக்களை காக்கும் வகையில், நேற்று கடைபிடிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு, நோய் தாக்கும் பீதியில் இருந்த பொதுமக்கள் மத்தியில், சிறிது நம்பிக்கையை விதைத்துள்ளது. நேற்றைய ஊரடங்கு, கொரோனா வைரஸ் பரவும் சங்கிலித்தொடரை துண்டிக்க உதவும்.ஊரடங்கின் முக்கியத்துவத்தை உணர்ந்து, பொதுமக்கள் ஒவ்வொருவரும் அனாவசியமாக பொது இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்; கைகளை கழுவ வேண்டும்.
நாளடைவில் வைரஸ் பரவும் சங்கிலி துண்டிக்கப்படும் என்கின்றனர் மருத்துவர்கள்.கொரோனா வைரஸ், உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸ் பாதிப்பு இரண்டாம் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அடுத்தடுத்த நிலைகளுக்கு கொண்டு செல்லாமல், இந்த தொடர் சங்கிலியை உடைத்தெறியவே, நேற்று ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க, பொது இடங்களுக்கு செல்லாமல், மக்கள் தங்களின் வீடுகளில், பாதுகாப்பாக இருந்தனர். பேருந்து, ரயில் என எந்த வாகனங்களும் இயங்காததால், சாலைகள் வெறிச்சோடி கிடந்தன.ஒரு நாள் போதுமா?ஆனால், இந்த ஒருநாள் தனித்திருத்தல் நிலை மட்டும் போதுமா என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. தனிப்பட்ட ஒவ்வொரு நபரும், தேவையின்றி வெளியிடங்களுக்கு செல்வதை தவிர்ப்பதன் வாயிலாகவும், அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவுவதன் வாயிலாகவும், ஊரடங்கு உத்தரவு இல்லாமலே, நம்மால் கொரோனாவை கொல்ல முடியும்.என்னென்ன செய்யலாம்?
பொழுதுபோக்கு நோக்கத்துக்காக, வெளியிடங்களுக்கு செல்வதை தவிர்க்கலாம். பணிக்கு செல்வோர் மட்டும், மாஸ்க் அணிந்த நிலையில், பொதுவெளிக்கு வர வேண்டும்.* பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மற்ற வகுப்புகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று போலவே, குழந்தைகள் வீட்டுக்குள் இருப்பது அவசியம்.
தேவையில்லாத வெளியூர் பயணங்களை தவிர்க்கலாம். முடிந்தவரை பேருந்து, ரயில் என மக்கள் அதிகம் பயன்படுத்தும் போக்குவரத்து சாதனங்களில், பயணம் செய்யாமல் இருப்பது நல்லது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், பழங்கள், காய்கறிகள், கீரைகள் சாப்பிடலாம்.* கண்ட இடங்களில் எச்சில் துப்புவது, கைக்குட்டை இல்லாமல் பொது இடங்களில் இருமுவது, தும்முவது ஆகிய செயல்பாடுகளை தவிர்க்கலாம்.
இப்படி ஒவ்வொருவரும் ஒத்துழைத்தால் மட்டுமே, கொரோனா வைரஸ் பரவும் சங்கிலித்தொடரை உடைத்தெறிய முடியும்.தனிப்பட்ட ஒவ்வொரு நபரும், தேவையின்றி வெளியிடங்களுக்கு செல்வதை தவிர்ப்பதன் வாயிலாகவும், அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவுவதன் வாயிலாகவும், ஊரடங்கு உத்தரவு இல்லாமலே, நம்மால் கொரோனாவை கொல்ல முடியும்.கோவையா...கொரோனாவா!குளங்களை துார்வாருவதாகட்டும், மரக்கன்று நடுவதாகட்டும், சமூக பிரச்னைகளுக்கு பேரணியாய் அணி திரண்டு குரல் கொடுப்பதாகட்டும்...கடந்த காலங்களில் வீதிகளில் இறங்கி, பல பிரச்னைகளுக்கு தீர்வு கண்டுள்ள நாம், இந்த முறை வீட்டிலிருந்தபடியே, கொரோனாவை கொன்று வெற்றி கொள்வோம்!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X