சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திறந்து மூடிய கடைகள்: போலீசார் கண்காணிப்பு

Added : மார் 23, 2020
Share
Advertisement

கோவை:கோவையில் நேற்று அதிகாலை, சில கடைகள் திறக்கப்பட்டு, 7:30 மணியளவில் மூடப்பட்டன.சுயஊரடங்கு உத்தரவுக்கு, கோவையில் நேற்று பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கினர். பேக்கரி, ஓட்டல்கள் என, ஒரு பெட்டிக்கடை கூட திறக்கப்படவில்லை.அவிநாசி ரோட்டில் கோல்டுவின்ஸ், கே.எம்.சி.எச்., உள்ளிட்ட இடங்களில் நேற்று அதிகாலை ஒன்று, இரண்டு கடைகள் மட்டும் திறந்து இருந்தன.காலை, 5:00 முதல் 7:30 மணி வரை இயங்கிய இந்த கடைகள், பின் மூடப்பட்டன. ஒன்றிரண்டு கடைகள், பாதி ஷட்டர் திறக்கப்பட்ட நிலையில் இயங்கின. ஆனால், 8:00 மணிக்கு மேல் கடைகள் முழு அளவில் மூடப்பட்டதை காண முடிந்தது.தொட்டிப்பாளையம் பிரிவு அருகே உள்ள ஒரு டாஸ்மாக் மதுக்கடையில் காலை, 7:30 மணியளவில் ஒரு சிலர் நடமாடி கொண்டிருந்தனர். இதனால், அங்கு சட்டவிரோத மது விற்பனை நடப்பதாக சந்தேகம் எழுந்தது.போலீசார் அங்கிருந்தவர்களை அப்புறப்படுத்தி அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அப்பகுதியில் அவ்வப்போது ரோந்து பணியிலும் ஈடுபட்டனர். அனைத்து பகுதிகளிலும் போலீசார், ஜீப் ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X