பொது செய்தி

தமிழ்நாடு

போக்குவரத்து 'கட்'; ஒத்துழைப்பால் பாதிப்பு குறைவு

Added : மார் 23, 2020
Share
Advertisement

கோவை:கோவையில் பஸ், ஆட்டோ உள்ளிட்ட போக்குவரத்து வசதி துண்டிக்கப்பட்டும், மக்கள் ஊரடங்கை சரியாக கடைப்பிடித்ததால், பாதிப்புகள் தவிர்க்கப்பட்டன.கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் விதமாக, நாடு முழுவதும் நேற்று 'மக்கள் ஊரடங்கு' கடைபிடிக்கப்பட்டது. அரசின் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து, மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வராமல், ஊரடங்கை கடைபிடித்தனர்.கோவை மண்டலத்தில் வழக்கமாக இயங்கக்கூடிய, 1,017 அரசு பஸ்களும், 150க்கும் மேற்பட்ட தனியார் பஸ்களும், நேற்று இயக்கப்படாததால் காந்திபுரம், உக்கடம், சிங்காநல்லுார் உள்ளிட்ட பஸ் ஸ்டாண்ட்கள், வெறிச்சோடி காணப்பட்டன.அதேபோல், 13 ஆயிரம் ஆட்டோக்களும், டாக்ஸி உள்ளிட்ட, 6,000 வாகனங்களும்ஓடவில்லை. மிகவும் சொற்ப அளவிலான ஆட்டோ, டாக்ஸிகள் தென்பட்டன.இருப்பினும் மக்கள் நடமாட்டம் இல்லாததால், எவ்வித பாதிப்பும்ஏற்படவில்லை. கோவை ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் காத்திருந்த, வடமாநிலத்தவர் போக்குவரத்து வசதியின்றி சிரமப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X