பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா; வரி விலக்கு கேட்கிறது 'கொடிசியா'

Added : மார் 23, 2020
Share
Advertisement

கோவை:''சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூடப்படும் சூழ்நிலை ஏற்பட்டால், தொழில் நிறுவனங்களுக்கு வங்கிக்கடன் வட்டி, உள்ளிட்ட வரி சலுகைகளை, மத்திய அரசு அளிக்க வேண்டும்,'' என, கொடிசியா தலைவர் ராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.மக்கள் ஊரடங்கு உரையில் பிரதமர் மோடி, அடுத்த சில நாட்களுக்கு, தொழில் நிறுவனங்களும் மூடப்படும் சூழ்நிலை ஏற்பட்டால், 'சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், தொழிலாளர் நலனில் அக்கறை செலுத்தி, சம்பளம் குறைத்தல், பிடித்தம் செய்யக்கூடாது' என அறிவுறுத்தியிருந்தார்.இது தொடர்பாக, கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கத்தின் (கொடிசியா) தலைவர் ராமமூர்த்தி, மத்திய மாநில அரசுகளுக்கு அனுப்பியுள்ள வேண்டுகோள்:சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள், தினசரி மற்றும் வார அடிப்படையில் வரவு செலவுகளை மேற்கொண்டு, நிதி நிர்வாகம் செய்து வருகின்றன.நான்கு வாரம் மூட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், எவ்வித வரவு செலவுகளும் மேற்கொள்ள இயலாது. வருவாய் இல்லாமல், பி.எப்., ஜி.எஸ்.டி., மற்றும் வருமான வரி செலுத்த முடியாத நிலை ஏற்படும்.எனவே, தொழிற்சாலை மூடியிருக்கும் காலகட்டத்தில், வங்கி வரவு, செலவு கணக்குகளை நிறுத்தி வைக்கப்பட்டதாக கருதி, தகுந்த அறிவுறுத்தல்களை அரசு அளிக்க வேண்டும். கடன்களுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும்.மானியங்களை உடனடியாக வழங்க வேண்டும். மூன்று மாதங்களுக்கு செலுத்த வேண்டிய ஜி.எஸ்.டி., வருமான வரி உள்ளிட்ட வரிகளை தள்ளுபடி செய்ய வேண்டும்.மேலும் மூன்று மாத காலத்துக்கு அவகாசம் வழங்க வேண்டும். அரசு துறைகள் சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய, நிலுவை தொகைகளை உடனே வழங்க வேண்டும்.தாமத கட்டணங்களை ரத்து செய்ய வேண்டும். இயல்பு நிலைக்கு திரும்பும் வரை, கடன் திரும்ப செலுத்தும் அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்.கொரோனா நோய் பரவாமல் தடுக்க, அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு, தொழில் நிறுவனங்கள் முழு ஒத்துழைப்பு வழங்கும்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X