பொது செய்தி

தமிழ்நாடு

முகக்கவசங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு : கோவை மருந்து வியாபாரிகள் சங்கம் கவலை

Added : மார் 23, 2020
Share
Advertisement
 முகக்கவசங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு : கோவை மருந்து வியாபாரிகள் சங்கம் கவலை

கோவை:அரசு நிர்ணயித்த விலையில், புதிதாக முகக்கவசங்கள் கொள்முதல் செய்யும் வரையில், மருந்துக்கடைகளில் முகக்கவசங்களுக்கு தட்டுப்பாடு நிலவும் என, மருந்து வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக, முகக்கவசம் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது. விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில், கடந்த 21ம் தேதி, முகக்கவசங்களுக்கான அதிகபட்ச விலையை, மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சகம் நிர்ணயித்தது.புதிய விலையில், முகக்கவசங்களை உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்யும் வரை, முகக்கவசங்களை விற்பனை செய்ய வேண்டாம் என, மருந்துக்கடை சங்கங்கள் முடிவு செய்துள்ளன.கோவை மருந்து வியாபாரிகள் சங்க தலைவர் கருப்பையா கூறியதாவது:கொரோனா வைரஸ் காரணமாக, சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பால், மூலப்பொருட்களின் விலை உயர்ந்ததாக கூறி, முகக்கவசங்களின் தயாரிப்பு விலையை உற்பத்தி நிறுவனங்கள் உயர்த்தின.தேவை அதிகரித்ததால், மருந்துக்கடை விற்பனையாளர்களும் அதே விலைக்கு கொள்முதல் செய்து, விற்பனை செய்தோம். சோப்புகள், சானிடைசர்கள் போல, முகக்கவசங்களில் சில்லறை விலை போன்ற தகவல்களை குறிப்பிட்டு, விற்பனை செய்வதில்லை.அதிக விலைக்கு விற்பனை செய்வதை தடுக்க, பொருட்களில் தயாரிப்பாளர் முகவரி, காலாவதியாகும் தேதி, சில்லறை விலை உள்ளிட்ட தகவல்களை தெளிவாக குறிப்பிட்டு விற்பனை செய்ய வேண்டும் என அரசு அறிவுறுத்தியது. இதனால், தகவல்கள் குறிப்பிடப்படாத பழைய ஸ்டாக்குகளை விற்பனை செய்வதில் சிக்கல் எழுந்தது.இந்நிலையில், மூன்றடுக்கு முகக்கவசம், 10 ரூபாய்க்கும், இரண்டடுக்கு முகக்கவசம் 8 ரூபாய்க்கும் விற்பனை செய்ய வேண்டும் என, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. கூடுதல் விலைக்கு விற்றால், அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ், நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனால் விலை குறிப்பிடாத, பழைய முககவச ஸ்டாக்குகளை விற்பனை செய்ய முடியாத சூழல் உள்ளது.உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து, புதிய விலைக்கு முகக்கவசங்கள் கிடைக்க ஒரு வார காலம் ஆகும். அதுவரை, மருந்து கடைகளில் முகக்கவசங்களை விற்பனை செய்வதில்லை என, மருந்து வணிக சங்கங்கள் முடிவு செய்துள்ளன.தட்டுப்பாட்டை தடுக்க, பொருட்களின் விபரங்கள் ஒட்டப்படாத பழைய முகக்கவசங்களை, அரசு நிர்ணயித்த விலைக்கே விற்பனை செய்ய, மருந்து கடைகளுக்கு அரசு அனுமதி வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X