பொது செய்தி

தமிழ்நாடு

சத்குரு சேவாஸ்ரமத்தில் வயிற்று பசிக்கு உணவு

Added : மார் 23, 2020
Share
Advertisement

கோவை:கோவையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக நேற்று, அனைத்து கடைகளும் முழுமையாக அடைக்கப்பட்டு இருந்தன.இதனால், வெளியூரில் இருந்து இங்கு வேலைக்கு வந்தவர்கள் மற்றும் ஆதரவற்றோர் பலர், ஒரு நேர உணவு கூட கிடைக்காமல் சிரமப்பட்டனர்.ஆர்.எஸ்.புரம் கிழக்கு வெங்கடசாமி ரோட்டில் உள்ள சத்குரு சேவாஸ்ரமம் குழந்தைகள் இல்லத்தில் காலை, மதியம் இரண்டு வேளையும், நேற்று உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன. 50க்கும் மேற்பட்டோர் இங்கு உணவு வழங்குவதை அறிந்து, வந்து உணவு வாங்கி சாப்பிட்டனர்.மார்ச் 31ம் தேதி வரை, இங்கு மதிய உணவு மட்டும் வழங்கப்படும் என, சேவாஸ்ரம நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X