பொது செய்தி

தமிழ்நாடு

வீடு இல்லாதவர்களுக்கு உணவு தன்னார்வலர்கள் நெகிழ்ச்சி

Added : மார் 23, 2020
Share
Advertisement

கோவை:கோவையில் வீடு இல்லாமல் ரோட்டில் தஞ்சமடைந்தவர்களுக்கு உணவு வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நேற்று நாடு தழுவிய ஒரு நாள் சுய ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டது.இதற்கு கோவை மக்கள் பெரும் ஆதரவு அளித்தனர். முடிந்தளவு வெளியே யாரும் வராமல் வீட்டிலேயே தஞ்மடைந்தனர்.ஆனால், வீடு இல்லாத ஏழை, எளிய மக்கள் ரோட்டோரத்தில் ஒன்றாக அமர்ந்திருந்தனர். நேற்று அனைத்தும் மூடப்பட்டு இருந்தால், வரிசையாக அமர்ந்து உணவுக்காக காத்திருந்தனர்.கோவையை சேர்ந்த கிருத்திகை மாத கூட்டு வழிபாட்டு பேரவை என்ற அமைப்பை சேர்ந்தவர்கள், ரோட்டில் ஆதரவின்றி தவித்த எளியோருக்கு உணவு பொட்டலங்களை வழங்கினர். இவர்களை போன்று மேலும் சிலர் தங்களால் முடிந்தளவு உதவிகளை செய்தனர்.அவர்கள் கூறுகையில், 'வீட்டில் இருப்போர் தங்களுக்கு தேவையானவற்றை வைத்து சமாளித்து விடுவார்கள். ஆனால், வீடு இல்லாத, ரோட்டில் தஞ்சமடைந்த மக்களுக்கு யார் பசி போக்குவார். அவர்களுக்கு மட்டுமல்ல, போலீசார், சுகாதார ஊழியர்களுக்கும் உணவு வழங்கினோம்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X