பொது செய்தி

தமிழ்நாடு

அந்த மலேசியா குடும்பத்தை 'செக்' பண்ணுனீங்களா இல்லையா?

Added : மார் 23, 2020
Share
Advertisement

கோவை:கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன், பிரதமர் மோடி அறிவித்த சுய ஊரடங்கு, நேற்று கோவை மாநகரில் முழுமையாக கடைபிடிக்கப்பட்டது.கோவை கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கொரோனா கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி, அலுவலர்கள், நிலவரத்தை கண்காணித்து வருகின்றனர். இங்கு ஒரு டாக்டர், ஒரு நர்ஸ், ஒரு பார்மசிஸ்ட், வருவாய்த்துறை அலுவலர்கள், பணியில் உள்ளனர்.இவர்கள், 1077 என்ற டெலிபோன் எண்ணுக்கு வரும் போன் அழைப்புகளுக்கு பதிலளித்து வருகின்றனர். பலர், சளி, காய்ச்சல், இருமல் தொடர்பான சந்தேகங்களை கேட்கின்றனர். தினமும் 30 முதல், 40 அழைப்புகள் வரை வருகின்றன.இந்த மையத்துக்கு, நேற்று முன்தினம் இரவில், கணபதியில் இருந்து போனில் பேசிய ஒருவர், 'பக்கத்து வீட்டில் மலேசியாவில் இருந்து குடும்பத்தினர் நான்கு பேர் வந்துள்ளனர். அவர்களை பரிசோதித்தீர்களா, எங்களுக்கு பயமாக உள்ளது' என்று தெரிவித்துள்ளார்.'விமான நிலையம் வழியாக வருபவர்கள் அனைவரும், தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே அனுப்பி வைக்கப்படுகின்றனர். எனவே, வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் பற்றி அச்சப்பட தேவையில்லை' என்று, அலுவலர்கள் அவரை சமாதானப்படுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X