பொது செய்தி

தமிழ்நாடு

நாட்டில் கொரோனா பீதி; தேவைதானா 'குடி?' கடை திறந்தோர் மீது கலெக்டர் நடவடிக்கை வேண்டும்

Added : மார் 23, 2020
Share
Advertisement

பேரூர்:நாட்டு மக்களை கொடிய நோயிடம் இருந்து காப்பாற்ற, 'மக்கள் ஊரடங்கு' கடைபிடிக்க உத்தரவிட்ட நிலையில், எவ்வித வெட்கமோ, குற்ற உணர்ச்சியோ இல்லாமல், நேற்று மது விற்கப்பட்டது.'கொரோனா' வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் போராடி வருகின்றன. 'கொரோனா' சங்கிலி தொடர் போல் பரவுவதை தடுக்க, 'மக்கள் ஊரடங்கு'க்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.அதன் படி, நேற்று காலை, 7:00 மணிக்கு மேல், தொண்டாமுத்துார் ஒன்றியத்தில் உள்ள, தினக்கூலி தொழிலாளர்கள் முதல், விவசாயிகள் வரை, வீடுகளில் இருந்தனர். சிறுவாணி சாலையே வெறிச்சோடியது.நாளொன்றுக்கு, ரூ.200 வருவாய் ஈட்டும் தள்ளுவண்டிக் கடைக்காரர்கள் கூட மூடிவிட்டனர். ஆனால், 'டாஸ்மாக்' மதுக்கடை பார்களில், எவ்வித வெட்கமோ, குற்ற உணர்ச்சியோ இல்லாமல் மது விற்பனை எப்போதும் போல், காலையிலேயே நடந்தது.இத்தகவல், வேகமாக பரவவே, வீடுகளில் குடும்பமாக இருந்த இளசுகள் முதல், பெரிசுகள் வரை, பார்களுக்கு படையெடுத்தனர். ஒரு பாட்டில், ரூ. 200க்கு விற்கப்பட்டது. தகவல் கசிவதை கை கூலிகள் வழியே அறிந்த அதிகாரிகள், கண்துடைப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்.பார் உரிமத்தை ரத்து செய்யணும்நேற்றைய தினம் நாட்டு மக்களின் பாதுகாப்புக்கானது. எனவே, விதிமீறிய தொண்டாமுத்துார் ஒன்றிய அனைத்து 'டாஸ்மாக்' பார்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, பார் உரிமத்தை மாவட்ட கலெக்டர் ரத்து செய்ய வேண்டும். அது, நாள்தோறும் பல குடும்பங்களை தெருவில் நிறுத்துவோருக்கு, எச்சரிக்கை மணியாக அமையட்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X