பொது செய்தி

தமிழ்நாடு

துாய்மை பணி தொழிலாளர்களுக்கு சோப்பு, முக கவசம் வினியோகம்

Added : மார் 23, 2020
Share
Advertisement

கோவை:கோவை மாநகராட்சி துாய்மை பணி தொழிலாளர்களுக்கு சோப்பு, முக கவசம் வழங்கப்பட்டது.கோவை மாநகராட்சியில் சுமார், 4,000 துாய்மை பணி தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு, 'கொரோனா' வைரஸ் பற்றிய விழிப்புணர்வு, சோப்பு, முககவசம் வழங்கும் நிகழ்ச்சி, கோயமுத்துார் மாநகராட்சி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில், டி.கே.மார்க்கெட் சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தில் நடந்தது.மாநகராட்சி மத்திய மண்டல உதவி கமிஷனர் மகேஷ் கனகராஜ், மண்டல சுகாதார அலுவலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில், 200 சோப்பு, முக கவசம், தொப்பி உள்ளிட்டவை வழங்கப்பட்டன.கோவை மாநகராட்சி கீழ்நிலை ஊழியர்கள் சங்க தலைவர் கிருஷ்ணன், பொருளாளர் செந்தில்குமார், துணை தலைவர்கள் சரவணன்,முரளிதரன், பி.மணிகண்டன், எம்.மணிகண்டன், துணை செயலாளர்கள் சுப்ரமணி, பன்னீர்செல்வம், இளைஞரணி செயலாளர் பிரகாஷ், மகளிரணி செயலாளர் செல்வராணி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X