பொது செய்தி

தமிழ்நாடு

டாக்டர்கள், நர்ஸ்களுக்கு பொதுமக்கள் வெரிகுட்!

Added : மார் 23, 2020
Share
Advertisement

கோவை:கொரோனா சிகிச்சையில் ஈடுபடும் டாக்டர்கள், சுகாதார பணியாளர்கள், நர்ஸ்களுக்கு கோவை பொதுமக்கள், மனமுருக நன்றி தெரிவித்தனர். பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று, பொதுமக்கள் நேற்று மாலை, 5:00 மணியளவில் அவரவர் வீடுகளின் முன், டாக்டர்களுக்கு கை தட்டி நன்றி தெரிவித்தனர். வீதிகளிலும், அபார்ட்மென்ட் பால்கனி, மொட்டை மாடிகளில் நின்றபடி கைதட்டிய இந்த காட்சி, டாக்டர்கள், நர்சுகள் அளித்து வரும் சேவையின் முக்கியத்துவத்தை உணர்த்தியது.கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், ஏராளமான போலீசார் குறிப்பிட்ட இடைவெளி விட்டு நின்று கைதட்டினர். கோவை ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் உள்ள மத்திய தீயணைப்பு நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில், தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து ஐந்து நிமிடம் கைதட்டி நன்றியை தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X