பொது செய்தி

தமிழ்நாடு

ஒரு நாள் ஊரடங்கு; மறக்க முடியாத ஒன்று!

Added : மார் 23, 2020
Share
Advertisement

கோவை:கொரோனாவால் ஒரு நாள் சுய ஊரடங்கு, எப்படி இருந்தது? கோவை மக்கள் சிலரின் கருத்துக்கள் இதோ!.காலையில் இருந்து எந்த வேலையும் இல்லாததால், குடும்பத்தினரோடு நேரம் செலவழிக்க முடிந்தது. வீட்டில் நீண்ட நாட்களாக, கிடப்பில் போடப்பட்ட வேலைகளை எல்லாம் நல்ல முறையில் செய்து முடித்தது மகிழ்ச்சியளிக்கிறது.- சுப்ரமணியம்,62 முன்னாள் ராணுவ வீரர், சேரன்மாநகர்.இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் எப்படி இருக்கிறது, மருந்து கண்டுபிடித்து விட்டார்களா என, டி.வி.,சேனல்களையும், மொபைல் போனிலும் மூழ்கி ஆராய்ந்து கொண்டே இருந்தேன். இந்த நாள் என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்று.- கருப்பையா,30. ஐ.டி.நிறுவன ஊழியர், சிட்ரா.குடும்பத்தினரோடு பேசுவதும், வாட்ஸ் ஆப்பில் நண்பர்களுடன் உரையாடுவது என எப்படியோ மாலை வரை தாக்கு பிடித்து விட்டேன். மீண்டும் இதுபோன்ற பிரச்னைகள் வரக்கூடாது என கடவுளை வேண்டிக் கொண்டேன். - கவுசல்யா, 20. கல்லுாரி மாணவி, தண்ணீர்பந்தல்.நாட்டு நலனுக்காக மோடி எடுத்துள்ள இந்த முயற்சி வெற்றியடைய வேண்டும். நான் இந்தப்பகுதியில் இரண்டரை ஆண்டுகளாக வசிக்கிறேன், ஆனால் இன்றுதான் சக குடியிருப்புவாசிகளிடம் மனம் விட்டு பேச முடிந்தது.- தங்கவேல்,30 தனியார் நிறுவன ஊழியர், ஹோப்காலேஜ்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X