பொது செய்தி

தமிழ்நாடு

புகார் தர்றதுக்கு முன்னால கையை கழுவிட்டு வாங்க!

Added : மார் 23, 2020
Share
Advertisement

தொண்டாமுத்துார்:'கொரோனா' வைரஸ் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, புகார் அளிக்க வரும், பொதுமக்கள், கைகளை கழுவி விட்டு வர வேண்டும் என, போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.உலகம் முழுவதும், 'கொரோனா' வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அனைத்து இடங்களிலும் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.பொது இடங்கள், கூட்டம் நிறைந்த பகுதி, அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் என, அனைத்து இடங்களிலும், கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.தொண்டாமுத்துார் மற்றும் வடவள்ளி போலீஸ் ஸ்டேஷன்களில், புகார் அளிக்க வரும் பொதுமக்கள், கைகளை கழுவிக் கொள்ள, ஸ்டேஷன் வளாகத்தில் பிரத்யேக வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.போலீசார் கூறுகையில் 'கொரோனா வைரஸ் தொற்றாமல் இருக்க, போலீஸ் ஸ்டேஷன் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு உள்ளது. 'புகார் அளிக்க வரும் பொதுமக்கள், கை கழுவ, ஸ்டேஷன் வளாகத்தில் இடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நாங்களும் அடிக்கடி கை கழுவி விட்டே பணிகளை மேற்கொள்கிறோம்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X