பொது செய்தி

தமிழ்நாடு

ஆடியோ, வீடியோவில் பாடம்: சங்கரா கல்லூரி அறிவிப்பு

Added : மார் 23, 2020
Share
Advertisement

கோவை:கோவை சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லுாரியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருக்கும் வகையில், மாணவர்களுக்கு டிஜிட்டல் முறையில் பாடம் கற்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.மத்திய அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பள்ளி,கல்லுாரிகள் அனைத்தும் விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், மாணவர்களின் நலன் கருதி டிஜிட்டல் முறையில் பாடங்கள் கற்பிக்க மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தில் சில கல்லுாரிகள் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. சரவணம்பட்டி பகுதியில் அமைந்துள்ள, சங்கரா கல்லுாரி, 'மை- கிளாஸ்ரூம்' ஆன்லைன் கல்வி அமைப்புடன் இணைந்து இதற்கான செயல்பாடுகளை மேற்கொண்டுள்ளது. அதன் படி, மாணவர்கள், 'மை- கிளாஸ்ரூம்', 'கூகுள் கிளாஸ் ரூம்', 'ஸ்வயம்', 'யூ- டியூப்' இணைப்புகள் மூலம் பாடம் கற்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கல்லுாரி ஆசிரியர்களிடம் மாணவர்கள், வாட்ஸ் ஆப், டெலிகிராம், பேஸ்புக், கல்லுாரி இணையதளம் மூலம் ஆடியோ, வீடியோ மூலம் சந்தேகங்களை கேட்க வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், 'ஆன்லைன்' மூலமே மாணவர்கள் மாதிரி தேர்வுகளை எழுதலாம் எனவும் கல்லுாரி நிர்வாக அறிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X