பொது செய்தி

தமிழ்நாடு

புறநகரில் ஆவின் பால் தட்டுப்பாடு: பச்சிளங்குழந்தைகள் பலர் தவிப்பு

Added : மார் 23, 2020
Share
Advertisement

கோவை:கோவை புறநகரில் உள்ள, ஒரு சில ஆவின் வினியோகிப்பாளர்கள், குறைந்த அளவு பால் மட்டுமே சப்ளை செய்ததால், வாடிக்கையாளர்கள் ஏமாற்றமடைந்தனர்.கொரோனா வைரஸ் பாதிப்பு தவிர்க்க, நேற்று நாடு முழுவதும் மக்கள் சுய ஊரடங்கு கடைபிடித்தனர். இந்நிலையில், மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க, அந்தந்த துறை சார்பில், நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.ஆவின் நிர்வாகம் தரப்பில், அனைத்து பகுதிகளுக்கும், தட்டுப்பாடின்றி பால் வினியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.ஆனால், சுந்தராபுரம், குனியமுத்துார், போத்தனுார், மதுக்கரை பகுதிகளில், செயல்படும் ஆவின் பாலகங்களில், பால் இல்லாததால், பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். நகருக்குள் தொலைதுாரத்தில் செயல்படும் பாலகங்களுக்கு சென்று, பால் வாங்கி வந்து சமாளித்தனர்.வாடிக்கையாளர்கள் கூறுகையில், 'பல வீடுகளில், இந்த பாலை நம்பித்தான் பச்சிளங்குழந்தைகள் இருக்கின்றனர். ஆகவே, இதுபோன்ற நேரங்களில், முறையாக பால் வினியோகிக்க, ஆவின் நிர்வாகம் வினியோகஸ்தர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்; மீறுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X