பொது செய்தி

தமிழ்நாடு

'கொரோனா' தடுப்பு நடவடிக்கை நேரலையில் உலக வன நாள் விழா

Added : மார் 23, 2020
Share
Advertisement

கோவை:கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, உலக வன நாள் தின விழா, கோவை வன மரபியல் கல்லுாரியில், 'பேஸ்புக் லைவ்' மூலம் கொண்டாடப்பட்டது.உலகம் முழுவதும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம் அடைந்துள்ளன. அரசு, தனியார் விழாக்கள் அனைத்தும், ரத்து செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கோவை வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தில், உலக வன நாள் விழா கொண்டாடப்பட்டது.அரங்கில் பார்வையாளர்கள் இன்றி, 'பேஸ்புக் லைவ்' மூலம் அனைவரும் கலந்து கொள்ளும் வகையில், 'டிஜிட்டல்' முறையில் விழா நடத்தப்பட்டது.முதுநிலை முதன்மை விஞ்ஞானி டாக்டர் கண்ணன் வாரியர் வரவேற்றார். நிறுவன இயக்குனர் டாக்டர் முருகேசன், வனத்தின் முக்கியத்துவம், சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் அவற்றின் பங்கு பற்றி விளக்கினார். 'வனங்களும், உயிர்பன்மையும்' என்ற தலைப்பில், விழிப்புணர்வு போஸ்டர் வெளியிடப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X