சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோவையில் ஏ.டி.எம்., கொள்ளை முயற்சி

Added : மார் 23, 2020
Share
Advertisement

கோவை:கோவை, பெரியகடை வீதியில் நேற்று ஏ.டி.எம்.,கொள்ளை முயற்சி நடந்தது.கோவை மாநகராட்சி அலுவலகம் எதிரில், இந்தியன் ஓவர்சிஸ் ஏ.டி.எம்.,மையம் உள்ளது. இங்கு. பணம் எடுக்க மற்றும் செலுத்துவதற்கென இரண்டு ஏ.டி.எம்.,இயந்திரங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், நேற்று மாலை இங்கு வந்த மர்ம நபர்கள் பணம் செலுத்துவதற்காக போடப்பட்ட இயந்திரத்தை, கல்லால் சேதப்படுத்தி திருட முயன்றனர்.ஆனால், உடைக்க முடியாமல் போனதால் அப்படியே விட்டு சென்றனர். தொடர்ந்து, வாடிக்கையாளர் அளித்த தகவலின் பேரில், உக்கடம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X