பொது செய்தி

தமிழ்நாடு

கோவை, நெல்லையில் இருவருக்கு

Added : மார் 23, 2020
Share
Advertisement

திருநெல்வேலி:துபாயில் இருந்து வந்தவருக்கு திருநெல்வேலி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் 'கொரோனா' பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த 43 வயது நிரம்பியவர் துபாயில் இருந்து சில தினங்களுக்கு முன்பு ஊர் திரும்பினார். அவர் காய்ச்சல், சளியால் மெடிக்கலில் மருந்துகளை வாங்கி உட்கொண்டுஉள்ளார். நெல்லையில் தனியார் ஓட்டலிலும் சில தினங்கள்தங்கியிருந்துள்ளார். அவருக்கு 'கொரோனா' இருக்கலாம் என சந்தேகம்எழுந்தது. திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லுாரிமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா இருப்பது நேற்று மாலை உறுதிப்படுத்தப்பட்டது.
கோவை
கோவையில், இளம்பெண் ஒருவருக்கு 'கொரோனா' தொற்று உறுதி செய்யப்பட்டுஉள்ளது.ஸ்பெயினில் படித்து வரும், கோவையை சேர்ந்த, 32 வயது பெண், அங்கிருந்து மார்ச் 17ல் கோவை வந்தார். இவருக்கு திடீரென காய்ச்சல், சளி ஏற்பட்டதையடுத்து, மார்ச் 19ல் கோவை அரசு மருத்துவமனைக்கு சென்றார்.பரிசோதித்த டாக்டர்கள்அவரை 'கொரோனா' வார்டில் அனுமதித்தனர்.அவரிடமிருந்து சளி, ரத்த மாதிரிகள் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பினர். பரிசோதனை முடிவில், அவருக்கு 'கொரோனா' தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர், சிங்காநல்லுார், இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X