'குடிமகன்கள்' தொல்லை

Added : மார் 23, 2020
Share
Advertisement

உடுமலை, ராஜலட்சுமி நகரில் 'குடிமகன்கள்' திறந்தவெளியில் மது அருந்தி அட்டகாசம் செய்வதால், அப்பகுதி மக்கள் நிம்மதி இழந்துள்ளனர்.ஆர்.ரங்கராஜ், உடுமலை.இருளில் சிங்கப்பூர் நகர்உடுமலை, சிங்கப்பூர் நகரில் தெருவிளக்குகள் எரியாமல் இருப்பதால், இரவில் அப்பகுதியில் வெளியில் செல்ல மக்கள் அச்சப்படுகின்றனர்.எம்.பார்வதி, உடுமலை. சுகாதாரம் இல்லைஉடுமலை, வ.உ.சி.,வீதியில் குப்பைக்கழிவுகள் திறந்தவெளியில் கொட்டப்படுவதால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.வி.மணிமேகலை, உடுமலை.போக்குவரத்து பாதிப்புபொள்ளாச்சி காந்தி சிலையில் இருந்து பல்லடம் ரோடு வரையிலும், ரோட்டின் இருபக்கமும் வாகனங்கள் ஆக்கிரமித்து நிறுத்தப்படுவதால், போக்குவரத்து பாதிக்கிறது.ஏ.ஆனந்தராஜ், பொள்ளாச்சி.ரோடு போடணும்பொள்ளாச்சி - கோவை ரோட்டில் இருந்து, ஐயப்பன் கோவில் செல்லும் ரோடு திரும்பும் பகுதியில், சிதிலமடைந்து குண்டும் குழியுமாக உள்ளதால், வாகன ஓட்டுனர்கள் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.எஸ்.அன்புச்செல்வன், பொள்ளாச்சி.பாதுகாப்பு தடுப்பு தேவைஅம்பராம்பாளையம் சுங்கம் பகுதியில், ரோட்டில் பணி செய்யும் நெடுஞ்சாலைத்துறையினர், ஒளி பிரதிபலிப்பு ஸ்டிக்கர்களுடன் பாதுகாப்பு தடுப்பு வைக்க வேண்டும்.ஆர்.விஷ்ணு, அம்பராம்பாளையம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X