பொது செய்தி

தமிழ்நாடு

ஆசிரியர்களுக்கும் விடுமுறை அளிக்கணும்: அரசுக்கு நூலக வாசகர் வட்டம் கோரிக்கை

Added : மார் 23, 2020
Share
Advertisement

உடுமலை:பள்ளி மற்றும் கல்லுாரி ஆசிரியர்களுக்கும், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, விடுமுறை அளிக்க வேண்டுமென, உடுமலை முதற்கிளை நுாலக வாசகர் வட்டத்தின் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கு, இம்மாதம் 31ம்தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கல்லுாரி பேராசிரியர்கள் பணியில் உள்ளனர். மாணவர்கள் இல்லாத பள்ளிகளில், அடுத்த கல்வியாண்டுக்கான அட்டவணை தயாரிப்பது உள்ளிட்ட பணிகளை ஆசிரியர்கள் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், ஆசிரியர்களுக்கு விடுமுறை அளிக்கப்படாததும் தற்போது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.பள்ளி மற்றும் கல்லுாரிகளுக்கு ஆசிரியர்கள் செல்வதால், மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டும் கண்டு கொள்ளாமல் உள்ளனர். பள்ளி மற்றும் கல்லுாரிகளுக்கு அருகில் உள்ளவர்கள், பள்ளிக்கு இயல்பாக வந்து செல்கின்றனர். பள்ளிகளில் விளையாடுவதும், மற்ற மாணவர்களை வரவழைத்து பேசுவதாக உள்ளனர்.மாணவர்களை திருப்பி அனுப்புவதும் ஆசிரியர்கள் பெரும்பாடாக மாறியுள்ளது. இருப்பினும், ஒரு ஆசிரியர் இருக்கும் பள்ளிகளில், ஆசிரியருக்கு தெரியாமல் மீண்டும் மீண்டும் பள்ளிக்குள் நுழைந்து விடுகின்றனர். மேலும், ஆசிரியர்கள் பலரும் பஸ்சில் பயணம் செய்து பள்ளிக்கு வருவதால், பதட்டத்துடனே செல்ல வேண்டியுள்ளது.இதனால், ஆசிரியர்களுக்கும் விடுப்பு அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென, உடுமலை முதற்கிளை நுாலகர் வாசகர் வட்டத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.நுாலகர் வாசகர் வட்டத்தலைவர் லெனின் பாரதி கூறுகையில், ''அவசர காலத்தில் அரசு பணியாளர்கள் தான் மேற்பார்வை அதிகாரியாக அரசு நியமிக்க முடியும். அதனால் விடுமுறை அறிவிக்கப்பட்டு, ஆசிரியர்கள் வெளியூர் சென்று விடாமல், அவர்களை அழைத்து பணி வழங்குவதில் சிக்கல் ஏற்படும்.''இந்த சிக்கல் ஏற்படாமல், முன்பே, அரசு அழைப்பு விடும் பட்சத்தில், அனைத்து ஆசிரியர்களும் உடனடியாக அவர்களின் துறை அதிகாரிகளிடம் 'ரிப்போர்ட்' செய்ய வேண்டும் என அறிவுறுத்தி பின்னர் விடுமுறை அளிக்கலாம். ஆசிரியர்களுக்கு விடுமுறை அளிப்பதில் மாணவர்களின் நலன் இருப்பதால், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X