பொது செய்தி

தமிழ்நாடு

வேலை உறுதி திட்ட பணிகள் நிறுத்தம்

Added : மார் 23, 2020
Share
Advertisement

உடுமலை:உடுமலை, குடிமங்கலம் ஒன்றியங்களில், முழு ஊரடங்கையொட்டி ஊரக வேலை உறுதி திட்டப்பணிகளும் நேற்று நிறுத்தப்பட்டன.தேசிய அளவில், நேற்று முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. காலை, 7:00 மணி முதல், இன்று அதிகாலை, 5:00 மணி வரை அறிவிக்கப்பட்டது. வணிக வளாகங்கள், அரசு அலுவலகங்கள் என, அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மக்களுக்கான போக்குவரத்து வசதிகளும் நிறுத்தி வைக்கப்பட்டன.இதன்படி, தேசிய ஊரக வேலை உறுதி திட்டப்பணிகளும் நேற்று நிறுத்தப்பட்டன. கடந்த இரண்டாண்டுகளாக, வேலை உறுதி திட்டத்தில், விவசாயப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.தற்போது, வைரஸ் பாதிப்பு தடுப்பு நடவடிக்கையாக, உடுமலையில் சில ஊராட்சிகளில், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தற்காலிகமாக இப்பணிகள் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.விவசாயப்பணிகளாக இருப்பினும், நேற்று முழு ஊரடங்கை ஏற்று, உடுமலை, குடிமங்கலம் ஒன்றியங்களில், வேலை உறுதி திட்டப்பணிகள் முழுமையாக நிறுத்தி வைக்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X