பொது செய்தி

தமிழ்நாடு

நெகமம் காட்டன் சேலைகள் தேக்கம்: 'கொரோனா' பாதிப்பால் பெரும் இழப்பு

Added : மார் 23, 2020
Share
Advertisement
 நெகமம் காட்டன் சேலைகள் தேக்கம்: 'கொரோனா' பாதிப்பால் பெரும் இழப்பு

பொள்ளாச்சி,:நெகமம் காட்டன் சேலைகள், கொரோனா வைரஸ் பரவலால், விற்பனை குறைந்து தேக்கமடைந்துள்ளதால், உற்பத்தியாளர்கள் இழப்பை சந்தித்துள்ளனர்.நுால் சேலைகளில், ஆறு கெஜம், எட்டு கெஜம் சேலைகளுக்கு பெயர் பெற்றது நெகமம் கைத்தறி காட்டன் சேலைகள். தற்போது, இளம் தலைமுறையினருக்கு ஏற்ற வகையில், கைத்தறி சேலையில் மாற்றங்களை புகுத்தி, நெகமம் காட்டன், கோவை காட்டன் சேலைகள் என்ற பெயரில், உலகளாவிய விற்பனையில் கொடிகட்டி பறக்கிறது.இந்தியா மட்டுமின்றி, கனடா, அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளிலும் பல ஆண்டுகளாக விற்பனையாகிறது.நெகமம் காட்டன் சேலைகள் தயாரிப்பில், நெகமம், சேரிபாளையம், எம்மேகவுண்டன்பாளையம், காணியாலாம்பாளையம், குள்ளக்காபாளையம், வீதம்பட்டி, வக்கம்பாளையம், ஜலத்துார், ஆதியூர், சின்னநெகமம், நல்லட்டிபாளையம் உள்ளிட்ட, 30க்கும் மேற்பட்ட கிராமங்களில், 50 வயதுக்கு மேற்பட்ட அனுபவமிக்கவர்களே நெசவில் ஈடுபட்டுள்ளனர்.இரண்டு நாட்களில் ஒரு சேலையும், மூன்று நாட்களில் கைத்தறி பட்டு சேலையும் நெசவு மேற்கொண்டு, உற்பத்தி செய்கின்றனர். இச்சேலைகள், 1,000 முதல், 3,500 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.சமீப நாட்களாக கேரளாவில் கொரோனாவின் தாக்குதல் வேகமாக பரவி வருகிறது. கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்தாலும், தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாத காரணத்தால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.இதன்காரணமாக, கேரளாவில் பல்வேறு நகரங்களில் இருந்து, நெகமம் வரும் வியாபாரிகள் வரத்து குறைந்துள்ளது. நெகமத்தில் இருந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட சேலை ரகங்கள் வெளிநாடுகளுக்கு அனுப்புவதும் குறைந்துள்ளது.நெகமம் காட்டன் சேலை உற்பத்தி அதிகரித்துள்ள போதிலும், விற்பனை வெகுவாக குறைந்திருப்பது விற்பனையாளர்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது.நெகமம் காட்டன் சேலை உற்பத்தியாளர்கள் கூறுகையில், 'சில ஆண்டுகளாக ஜி.எஸ்.டி.,யால், உற்பத்தி மட்டுமின்றி விற்பனையும் குறைந்தது. தற்போது, உற்பத்தி அதிகரித்த போது, கொரோனா வைரஸ் பாதிப்பால், விற்பனை குறைந்து விட்டது.இதனால், நெசவு செய்தும், விற்பனையாகாமல், ஆயிரக்கணக்கான சேலைகள் தேக்கம் அடைந்துள்ளன. நெசவாளர்கள் உழைப்பும் வீணாகி, பெரும் இழப்பு ஏற்படுத்தியுள்ளது,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X