பொது செய்தி

தமிழ்நாடு

காடுகள் தினம் கொண்டாட்டம்: வனத்துறையினர் மரக்கன்று நடவு

Added : மார் 23, 2020
Share
Advertisement
 காடுகள் தினம் கொண்டாட்டம்: வனத்துறையினர் மரக்கன்று நடவு

ஆனைமலை:ஆனைமலை புலிகள் காப்பகத்தில், மரக்கன்றுகள் நடவு செய்து, வனத்துறையினர் சர்வதேச காடுகள் தினம் கொண்டாடினர்.உலக அளவில் பல்வேறு நாடுகளில், 2012ம் ஆண்டு முதல், மார்ச், 21ம் தேதி சர்வதேச காடுகள் தினம் கொண்டாடப்படுகிறது. பல வகை காடுகளின் முக்கியத்துவம், காடுகள், காட்டினுள் உள்ள மரங்களை காப்பது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்த, ஆண்டுதோறும் காடுகள் தினம் கொண்டாடப்படுகிறது.சர்வதேச காடுகள் தினத்தை முன்னிட்டு வனத்துறையினர், ஆனைமலை புலிகள் காப்பகத்தில் மரக்கன்றுகள் நடவு செய்து கொண்டாடினர்.பொள்ளாச்சி அடுத்த சர்க்கார்பதி அரசு துவக்கப்பள்ளி வளாகத்தில், வனச்சரக அலுவலர் காசிலிங்கம் தலைமையிலான வனத்துறையினர், புங்கன், வேம்பு உள்ளிட்ட மரக்கன்றுகள் நடவு செய்தனர்.இதேபோல், டாப்சிலிப் அரசு உண்டு உறைவிட நடுநிலைப்பள்ளியில், வனச்சரக அலுவலர் சக்திவேல் தலைமையிலான வனத்துறையினர் மரக்கன்றுகள் நடவு செய்தனர். காடுகளையும், காட்டுயிர்களையும் காக்க, வனத்துறையினர் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X