வாய்க்காலை முழுமையாக புதுப்பிக்க வலியுறுத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வாய்க்காலை முழுமையாக புதுப்பிக்க வலியுறுத்தல்

Added : மார் 23, 2020
Share

உடுமலை:கடைமடைக்கும் போதியளவு தண்ணீர் கிடைக்க, கிழுவங்காட்டூர் வாய்க்காலை முழுமையாக புதுப்பிக்க விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.பி.ஏ.பி., முதலாம் மற்றும் மூன்றாம் மண்டல பாசனத்தில், கிழுவங்காட்டூர் சுற்றுப்பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.உடுமலை வாய்க்காலில் இருந்து பிரிந்து, அப்பகுதிக்கு செல்லும் கிளைக்கால்வாய் பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் உள்ளது. இதனால், கால்வாய் கரைகள் இடிந்து விழுந்து, மண் கரையாக மாறியுள்ளது.முழு கொள்ளளவில், கால்வாயில் தண்ணீர் திறந்தால் கரை உடையும் அபாய நிலை காணப்படுகிறது. மேலும், நீர் விரயம் காரணமாக கடைமடை பகுதிக்கும் போதியளவு தண்ணீர் சென்று சேர்வதில்லை.விவசாயிகள் கூறியதாவது: பி.ஏ.பி., மண்டல பாசனம் மட்டுமே இப்பகுதியில் நிலவி வரும் வறட்சியை சமாளிக்க உதவுகிறது. ஆனால், கால்வாயின் பரிதாப நிலையில், ஒவ்வொரு சுற்றிலும் போதுமான தண்ணீர் கிடைப்பது கேள்விக்குறியாக உள்ளது.எனவே, கால்வாயை முழுமையாக புதுப்பிக்க அரசு நடவடிக்கை எடுத்தால், பல ஆயிரம் ஏக்கரில் விவசாயம் பாதுகாக்கப்படும். இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X