பொது செய்தி

தமிழ்நாடு

'கொரோனா' ஒழிக்க மக்கள் ஊரடங்கு வெறிச்சோடிய வால்பாறை, ஆனைமலை

Added : மார் 23, 2020
Share
Advertisement

'கொரோனா' வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த, ஆனைமலை, வால்பாறையில் நேற்று மக்கள் சுய ஊரடங்கு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நகராட்சி நிர்வாகம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை சார்பில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.
வால்பாறையில் நேற்று பிரதமர் அறிவித்த மக்கள் ஊரடங்கு அறிவிப்புக்கு ஒத்துழைப்பு கொடுத்து, மக்கள் வீட்டிலேயே இருந்தனர்.இதனால், வால்பாறை நகரம் ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடியது. பஸ், ஆட்டோ, டூரிஸ்ட் வேன், லாரி உட்பட எதுவும் இயங்கவில்லை.வால்பாறை நகராட்சி கமிஷனர் பவுன்ராஜ் உத்தரவின் பேரில் ஊரடங்கு உத்தரவு நாளில், துாய்மை பணியாளர்கள் நேற்று பாதுகாப்பு கவசங்கள் அணிந்து வீடு மற்றும் கடைகளில் இருந்த குப்பைகளை அகற்றினர்.வால்பாறை நகர் வழியாக வந்த வாகனங்களை போலீசார் சோதனை செய்த பின், 'அட்வைஸ்' செய்து அனுப்பினர்.ஆனைமலைஆனைமலை, கோட்டூர் பகுதிகளில் மக்கள் ஊரடங்கு நடவடிக்கைக்கு, அனைத்து தரப்பினரும் முழு ஒத்துழைப்பு கொடுத்தனர்.
'கொரோனா' வைரஸ் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க, ஆனைமலை தாலுகா பகுதிகளில், மக்கள் ஊரடங்குக்காக அனைத்து கடைகளும் மூடப்பட்டன.கோட்டூர், ஆனைமலை, ஆழியாறு சுற்றுப்பகுதிகளில், மளிகை கடைகள், டிப்பார்ட்மென்ட் கடைகள் மூடப்பட்டன. மருந்துக்கடை, பெட்ரோல் பங்க் மட்டுமே செயல்பட்டன.எப்போதும் பரபரப்பாக காணப்படும், நா.மூ.சுங்கம், அம்பராம்பாளையம் சுங்கம் பகுதியில், வாகனங்களின்றி ரோடுகள் வெறிச்சோடி காணப்பட்டன. கிராமப்பகுதியிலும் மக்கள் நடமாட்டமின்றி காணப்பட்டன.- நிருபர் குழு -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X