பொது செய்தி

தமிழ்நாடு

தென்னை நார் தொழிற்சாலைகள் மூடல்: லாரிப்பேட்டையில் வாகனங்கள் நிறுத்தம்

Added : மார் 23, 2020
Share
Advertisement
 தென்னை நார் தொழிற்சாலைகள் மூடல்: லாரிப்பேட்டையில் வாகனங்கள் நிறுத்தம்

பொள்ளாச்சி:'கொரோனா' பாதுகாப்பு நடவடிக்கையாக, பொள்ளாச்சி பகுதியில் உள்ள தென்னை நார் நிறுவனங்கள் நேற்று செயல்படவில்லை.பொள்ளாச்சி பகுதியில், 250க்கும் மேற்பட்ட தென்னை நார் மற்றும் நார் சார்ந்த பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள் செயல்படுகின்றன. இந்நிலையில், இந்த நிறுவனங்களின் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.கோவை மாவட்ட தென்னை நார் மற்றும் தென்னை நார் சார்ந்த பொருட்கள் உற்பத்தியாளர் சங்க தலைவர் கவுதமன் கூறியதாவது:'கொரோனா' பாதுகாப்பு நடவடிக்கையாக, பிரதமர் சுய மக்கள் ஊரடங்கு அறிவித்த உடன், பொள்ளாச்சி பகுதியில் உள்ள தென்னை நார் நிறுவனங்களுக்கு விடுமுறை விட சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நிறுவனங்கள் நேற்று செயல்படவில்லை.பணியாளர்களுக்கு கையுறை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. பணியாளர்களுக்கு தேவையான காய்றி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வாங்கி தரப்பட்டு வீட்டில் இருக்க அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு, அவர் கூறினார்.லாரிகள் முடக்கம்பொள்ளாச்சி பகுதியில் நேற்று லாரிகள் இயங்கவில்லை. சரக்கு வாகனங்கள் உள்ளிட்ட லாரிகள் இயக்கம் இல்லாததால், காய்கறி மற்றும் சரக்கு ஏற்றிச் செல்லும் பணிகள் நடக்கவில்லை. லாரி பேட்டையில் அனைத்து லாரிகளும் நிறுத்தப்பட்டன.'கொரோனா வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கை மற்றும் சுய ஊரடங்குக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், லாரிகள் இயக்கப்படவில்லை; அனைத்து லாரிகளும் நிறுத்தப்பட்டுள்ளன,' என லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.* கிணத்துக்கடவு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில், இறைச்சி கடைகளை தவிர மற்ற கடைகள் மூடப்பட்டு, சுய ஊரடங்குக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது. கிணத்துக்கடவில், பொள்ளாச்சி - கோவை ரோடு பகுதிகளில் உள்ள மளிகை கடைகள், ஜவுளி கடை, நகை கடைகள் மூடப்பட்டன.இதேபோல், ஆர்.எஸ்., ரோடு பகுதிகளில் உள்ள கடைகள் மூடப்பட்டு இருந்தது. இதில், 10க்கும் மேற்பட்ட இறைச்சி கடைகள் திறக்கப்பட்டு, இறைச்சி விற்பனை நடந்தது.இதேபோல், வடசித்துார், கொண்டம்பட்டி, வடபுதுார், சொலவம்பாளையம் உட்பட பல கிராமங்களிலும், நெகமம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களிலும் இறைச்சி கடைகளை தவிர மற்ற கடைகள் மூடப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X