பொது செய்தி

தமிழ்நாடு

பயணம் தவிர்த்தால் 'கொரோனா' பரவாது

Added : மார் 23, 2020
Share
Advertisement

பொள்ளாச்சி:கொரோனா' பரவல் பாதிப்பை தவிர்க்க, பொதுமக்கள் வரும், 31ம் தேதி வரை பயணங்களை ரத்து செய்வது அவசியம் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் வந்த 'கொரோனா' வைரஸ் பாதிப்பு, உள் நாட்டுக்குள் பரவாமல் தடுக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. நேற்று சுய ஊரடங்கு அறிவிக்கப்பட்டதுடன், ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.தெற்கு ரயில்வேயின் கீழ் இயங்கும் அனைத்து தொலை துார மெயில்கள், எக்ஸ்பிரஸ்கள், இன்டர் சிட்டி ரயில்கள், பயணிகள் ரயில்களும் வரும், 31ம் தேதி நள்ளிரவு வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.தமிழக அரசு, நேற்று முன்தினம் மாலை வரை அறிவிக்கப்பட்ட சுய ஊரடங்கை, இன்று காலை, 5:00 மணி வரை நீட்டித்துள்ளது. ஏற்கனவே வெளிநாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டு, கேரள எல்லைகளில் போக்குவரத்து தடுக்கப்பட்டுள்ள நிலையில், பஸ் போக்குவரத்தையும் குறைக்க திட்டமிடுகிறது அரசு நிர்வாகம்.நோய் பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் இவ்வளவு தீவிரம் காட்டும் சூழலில், பொதுமக்கள் அதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டியது மிக அவசியம்.தங்கள் சொந்த வாகனங்கள் மூலம் வெளியூர்களுக்கு பயணிப்பதை, வரும், 31ம் தேதி வரை தவிர்ப்பது நல்லது. நேற்று சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்களை அரசு தனிமைப்படுத்தியுள்ளது.குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு பயணிப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். இதன் மூலம், நோய் தொற்றுக்கு ஆளாகும் வாய்ப்புகளை குறைக்கலாம் என அதிகாரிகள் வலிறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X