பொது செய்தி

தமிழ்நாடு

கிராமங்களில் இல்லை விழிப்புணர்வு சுகாதார பணியாளர்கள் கவனிக்கணும்

Added : மார் 23, 2020
Share
Advertisement
 கிராமங்களில் இல்லை விழிப்புணர்வு சுகாதார பணியாளர்கள் கவனிக்கணும்

பொள்ளாச்சி:பொள்ளாச்சி கிராமப்பகுதிகளில், 'கொரோனா' குறித்து விழிப்புணர்வு இல்லாததால், சுகாதார பணியாளர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.உலகம் முழுக்கபரவிய 'கொரோனா' வைரஸ் பாதிப்பு, இந்தியாவிலும் கால் பதித்து விட்டது. இது வரை, வெளிநாட்டில் இருந்த வருபவர்களுக்கு மட்டுமே உள்ள கொரோனா பாதிப்பு, உள் நாட்டுக்குள் பரவுவதை தடுக்க, மத்திய, மாநில அரசுகள் போராடுகின்றன.இதற்காக, நேற்று சுய ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. அதன் படி, மருத்துவமனைகள், மருந்துக்கடைகள், பாலகங்கள் மட்டுமே திறக்கலாம். மற்ற கடைகள் மூடப்பட்டன.பொதுமக்கள், வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே தங்கியிருக்க வேண்டும். கொரோனா பரவலின் தீவிரத்தை மட்டுப்படுத்தவும், மக்களை சுய கட்டுப்பாட்டுக்கு பழக்கவும் இந்த உத்தரவு இடப்பட்டது.பஸ்கள், ரயில்கள் இயங்கவில்லை. கடைகள், ஓட்டல்கள் அனைத்தும் மூடப்பட்டன. இத்தனை நடந்தும், போதுமான விழிப்புணர்வு இல்லாததால், பெரும்பாலான பொள்ளாச்சி கிராமங்களில் ஊரடங்கு இன்றி, சகஜ நிலை நிலவியது.பஸ்கள் ஓடவில்லை என்பதை தவிர, அனைத்தும் எப்போதும் போல இயங்கின. பல கிராமங்களில் கடைகள் திறந்து, வியாபாரம் களை கட்டியது. மக்கள் கூட்டம் கூட்டமாக நடமாடினர்.நேற்றைய நாளை நண்பர்களுடன் இணைந்து, விடுமுறை போல இளைஞர்கள் கொண்டாடினர். இளைஞர்கள் கூடி மைதானங்களில் கிரிக்கெட் விளையாடினர்.இதையெல்லாம் பார்க்கும் போது, கொரோனா பாதிப்பு குறித்து கிராமப்புற மக்களுக்கு போதுமான விழிப்புணர்வு ஏற்படவில்லை என்பது கண்கூடாக தெரிகிறது. அதனால், கிராமங்களில் சுகாதார பணியாளர்கள், ஊராட்சி செயலர்கள், விழிப்புணர்வு பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.பொள்ளாச்சி சூளேஸ்வரன்பட்டி அருகே மைதானத்தில், சுய ஊரடங்கு தினத்தை, விடுமுறை நாளாக எண்ணி, கிரிக்கெட் விளையாடிய இளைஞர்கள்.பொள்ளாச்சி சூளேஸ்வரன்பட்டி அருகே மைதானத்தில், சுய ஊரடங்கு தினத்தை, விடுமுறை நாளாக எண்ணி, கிரிக்கெட் விளையாடிய இளைஞர்கள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X