பொது செய்தி

தமிழ்நாடு

களைகட்டியது மது 'சில்லிங்' விற்பனை: கட்டுப்படுத்த தவறியது போலீஸ்

Added : மார் 23, 2020
Share
Advertisement

பொள்ளாச்சி:பொள்ளாச்சி சுற்றுப்பகுதிகளில், அரசு உத்தரவை சிறிதும் மதிக்காமல் சிலர், மது பானங்களை சில்லிங்கில் விற்றது, பொதுநல ஆர்வலர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.மத்திய அரசு கொரோனா பரவலை தடுக்க, நேற்று சுய ஊரடங்கை அறிவித்தது. தமிழகத்தில், டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களும் மூடப்பட்டன.இதை பயன்படுத்தி, சிலர் மது பானங்களை முன்கூட்டியே வாங்கி இருப்பு வைத்து, டாஸ்மாக் கடைகளுக்கு அருகேயும், கிராமங்களிலும் 'சில்லிங்' விற்பனை செய்தனர்.குவார்ட்டருக்கு, 100 ரூபாய் வரை அதிகம் வைத்து மது விற்கப்பட்டது. குடிமகன்கள் கூட்டமாக கூடி, மது வாங்கிச் சென்றனர். இதன் மூலம், நோய் பரவல் அபாயம் அதிகரித்தது. பெரும்பாலும் டாஸ்மாக் 'பார்'களில் வேலை செய்வோர் இந்த சில்லிங் விற்பனையில் ஈடுபட்டதாக சமூக அக்கறையுள்ள இளைஞர்கள் தெரிவித்தனர்.மக்களின் உயிரை காக்கும் நோக்கில், அரசு அறிவித்த சுய ஊரடங்கை சிறிதும் மதிக்காமல், பணம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு, சட்டவிரோதமாக மது விற்று, நோய் பரவலுக்கு வழி வகுத்த நபர்கள் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.ஆனால், மதுவிலக்குப்பிரிவு மற்றும் உள்ளூர் போலீசார் கண்துடைப்புக்காக சில வழக்குகள் பதிவு செய்துள்ளனர். இது, பொதுநல விரும்பிகளை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. இந்த சில்லிங் விற்பனைக்கு, மொத்தமாக மது 'சப்ளை' செய்த டாஸ்மாக் விற்பனையாளர்கள், விற்பனையை அனுமதித்த போலீசார், விற்பனை செய்தவர்கள் மீது சப் - கலெக்டரின் நடவடிக்கை எடுக்க வேண்டும்.சூழலின் தீவிரம் உணர்ந்து, போலீசாரும், அதிகாரிகளும், தனி நபர்களும் பொறுப்புடன் நடந்து கொள்ளாவிட்டால், நம் ஊரிலும் கொரோனா கோரத் தாண்டவம் அரங்கேறும் என்பதை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X