பொது செய்தி

தமிழ்நாடு

ஊடுருவும் கேரள வாகனங்கள் எல்லையில் கண்காணிப்பில்லை

Added : மார் 23, 2020
Share
Advertisement

பொள்ளாச்சி:தமிழக - கேரள எல்லைகள் 'சீல்' செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பொள்ளாச்சிக்குள் கேரள வாகனங்கள் சர்வ சாதாரணமாக ஊடுருவுகிறது.கேரளாவில், கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமுள்ளது. நோய் பரவலை தடுக்கும் வகையில், இரு மாநில எல்லைகள் அடைக்கப்பட்டு, 'சீல்' செய்யப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், சுய ஊரடங்கு நாளான நேற்று, பட்டப்பகலில் கேரள பதிவெண் கொண்ட வாகனங்கள் பொள்ளாச்சிக்குள் ஊடுருவி சர்வசாதாரணமாக வலம் வந்தன. சில வாகனங்களை போலீசார் தடுத்து, விசாரித்து விடுவித்தனர்.இதைக்கண்ட பொதுமக்கள், 'எல்லையில் போதிய கண்காணிப்பு இல்லாததால், கேரளாவில் இருந்து வாகனங்கள் பொள்ளாச்சிக்குள் நுழைகின்றன. இதனால், நோய் பரவல் அபாயம் ஏற்படும்,' என்ற அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.இரு மாநில எல்லையில், பிரதான ரோடுகள், செக்போஸ்ட்கள் மட்டுமின்றி, மற்ற வழித்தடங்களிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். இரு மாநிலங்களில் இருந்தும், மற்ற மாநிலத்துக்குள் வாகனங்கள் பிரவேசிப்பதை முற்றிலும் கட்டுப்படுத்த வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X