பொது செய்தி

தமிழ்நாடு

துண்டுக்கருப்பராயர் கோவில் மஹா கும்பாபிேஷக விழா

Added : மார் 23, 2020
Share
Advertisement

வால்பாறை:வால்பாறை, நடுமலை எஸ்டேட் வடக்கு பிரிவு. இங்குள்ள துண்டுக்கருப்பராயர், முனீஸ்வரன் சுவாமி கோவில் மகா கும்பாபிேஷக விழாவையொட்டி, நேற்று முன்தினம் மாலை நடுமலை தெற்கு பிரட்டு விநாயர் கோவிலிருந்து பக்தர்கள் முளைப்பாரி எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர்.தொடர்ந்து மாலை, 6:30 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, கலச தரிசனம், கும்பஸ்தாபனம், கும்ப அலங்காரம் நடந்தது. நேற்று காலை, 4:00 மணிக்கு இரண்டாம் கால யாக சாலை பூஜை நடந்தது. காலை, 5:00 மணிக்கு மந்திரஹோமம், விஷ்வமங்கள ஹோமம், பூர்ணாஹுதி மகாதீபாராதனை நடந்தது. காலை, 5:30 மணிக்கு விமான கலசத்திற்கு மஹா கும்பாபிேஷகம் செய்யப்பட்டது. சுவாமிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X