பொது செய்தி

தமிழ்நாடு

கோடை மழையால் தணிந்தது வெப்பம்

Added : மார் 23, 2020
Share
Advertisement
 கோடை மழையால் தணிந்தது வெப்பம்

பொள்ளாச்சி, வால்பாறை பகுதியில் பெய்த கோடை மழையால், வெப்பம் தணிந்ததால், மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.வால்பாறையில் கடந்த ஆண்டு ஆக., மாதம் பெய்த பருவமழையால், அனைத்து அணைகளும் நிரம்பின.
கடந்த நான்கு மாதங்களாக வால்பாறையில் மழைப்பொழிவு முற்றிலுமாக குறைந்து, வறட்சி நிலவுவதால், நீர்பிடிப்பு பகுதிகளுக்கு தண்ணீர் வரத்து வெகுவாக குறைந்து வருவதோடு, அணைகளின் நீர்மட்டமும் வேகமாக சரிந்து வருகிறது. வறட்சியினால் தேயிலை செடிகள் துளிர்விட முடியாமல் கருகின. இந்நிலையில், வால்பாறையில் கடந்த நான்கு நாட்களாக கோடைமழை பரவலாக பெய்கிறது.வால்பாறையை குளிர்விக்கும் வகையில் பெய்த கோடை மழையினால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.பொள்ளாச்சி, நெகமம், கிணத்துக்கடவு நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. இதனால், ஓடைகளில் மழை நீர் பெருக்கெடுத்தது.கிணத்துக்கடவு, நெகமம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில், கடந்த இரண்டு மாதங்களாக கோடை வெயில் சுட்டெரித்தது. பொதுமக்கள் வெப்பம் தாங்க முடியாமல், இளநீர், தர்பூசணி பழங்களை உட்கொண்டு, தாகம் தணித்து வந்தனர்.
இந்நிலையில், நேற்று முன் தினம், கனமழை பெய்ததால் வெயிலின் தாக்கம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. கோடையில் பெய்த மழையால் மக்கள் மகிழச்சி அடைந்தனர்.அணைகள் நிலவரம்சோலையாறு அணையின், 160 அடி உயரத்தில், நேற்று காலை, 27.97 அடிக்கு நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 59 கனஅடி தண்ணீர் வரத்து இருந்தது.மொத்தம், 72 அடி உயரமுள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 47.20 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 20 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அணையிலிருந்து வினாடிக்கு, 721 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.நேற்று காலை, 8:00 மணி வரை பதிவான மழையளவு விபரம் (மில்லி மீட்டரில்):வால்பாறை - 12, மேல்நீராறு - 1, வேட்டைக்காரன்புதுார் - 6, மணக்கடவு - 23, நவமலை - 10, பொள்ளாச்சி - 97, நெகமம் - 23, என்ற அளவில் மழை பெய்தது. - நிருபர் குழு -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X