சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சூறாவளி காற்றுக்கு வாழை மரங்கள் சேதம்

Added : மார் 23, 2020
Share
Advertisement
 சூறாவளி காற்றுக்கு வாழை மரங்கள் சேதம்

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு அடுத்துள்ள கோதவாடி, கொண்டம்பட்டி, அரசம்பாளையம், கோவிந்தாபுரம் பகுதிகளில், நேற்று முன்தினம் மாலை, 6:30 மணிக்கு மழை பெய்தது.தொடர்ந்து ஒரு மணி நேரம், சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. அதனை தொடர்ந்து மழையின் தீவிரம் குறைந்து, இரவு, 9:00 மணி வரை மழை பெய்தது. அதன்பின், சூறாவளி காற்று வீசியது. இதில், கோதவாடியை சேர்ந்த அருக்காணி என்பவர் குத்தகை நிலத்தில் கற்பூரவள்ளி, பூவன் மற்றும் நேந்திரன் ரக, 2,200 வாழை மரங்கள் பழத்தாருடன் சரிந்தது.அதே கிராமத்தை சேர்ந்த நடராஜன் என்பவர் குத்தகை நிலத்தில் ஆயிரம் வாழை மரங்களும், வேலுச்சாமி என்பவரின் தோட்டத்தில், 200 வாழை மரங்களும் காற்றில் சரிந்தது. கோவிந்தாபுரத்தில், ஈஸ்வரசாமி என்பவரின் தோட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சரிந்து பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X