பொது செய்தி

தமிழ்நாடு

கைகொடுத்தது வெப்பச்சலன மழை: காட்டுத்தீ பரவுவது குறைய வாய்ப்பு

Added : மார் 23, 2020
Share
Advertisement

ஆனைமலை:ஆனைமலை புலிகள் காப்பகத்தில், அதிக அளவில் யானைகள், வரையாடு, கடமான், சிறுத்தை, புலி உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. ஆண்டுதோறும் பிப்., முதல் மே மாதங்களில், கோடை காலத்தில், புலிகள் காப்பகத்தில் காட்டுத்தீ ஏற்படுகிறது.அப்போது, காட்டுத்தீ ஏற்படும் போது, மரங்கள், தாவரங்கள் அழிந்து வனத்தின் வளம் பாதிக்கப்படுவதுடன், வனவிலங்குகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகிறது.
கடந்த, பிப்.,யில் டாப்சிலிப்பில் கோழிகமுத்தி செல்லும் பகுதியில், சிறிய அளவில் காட்டுத்தீ ஏற்பட்டது. இரண்டு நாட்களுக்கு முன், பொள்ளாச்சி வனச்சரகத்துக்கு உட்பட்ட ஆழியாறு பகுதியில், இரு இடங்களில் பெரிய அளவில் காட்டுத்தீ ஏற்பட்டது.இந்நிலையில், நேற்று முன்தினம், புலிகள் காப்பகத்தின் சில பகுதிகளில், வெப்ப சலனத்தால் கோடை மழை பெய்தது. வால்பாறை சுற்றுப்பகுதிகளில், 12 மி.மீ., ஆனைமலை, சேத்துமடை பகுதிகளில், 6.6 மி.மீ., நவமலை மற்றும் ஆழியாறு வனப்பகுதிகளில், 10 மி.மீ., மழை பெய்தது. தற்போது, பெய்துள்ள மழையால், இன்னும் சில வாரங்களுக்கு காட்டுத்தீ ஏற்படும் அபாயம் தவிர்க்கப்பட்டு உள்ளது. இதனால், வனத்துறையினர் நிம்மதியடைந்து உள்ளனர்.
வனத்துறையினர் கூறியதாவது:ஒரு முறை மழை பெய்தால், 20 நாட்களுக்கு மேல், வனத்திலுள்ள மரம், மண்ணில் ஈரப்பதம் இருக்கும். தற்போது பெய்துள்ள மழைக்கு குறைந்தபட்சம், 20 நாட்கள் வரையில் காட்டுத்தீ ஏற்படுவது தவிர்க்கப்படும். மேலும், வனத்திலுள்ள தடுப்பணை, ஓடை, சிற்றோடை, குட்டைகளில் ஓரளவுக்கு நீர் அதிகரிக்கும், வனவிலங்குகள் தாகம் தீர்க்க இந்த மழை உதவும். இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X