பொது செய்தி

தமிழ்நாடு

நீரேற்று நிலையத்திற்கு தயாரானது அலுவலகம்

Added : மார் 23, 2020
Share
Advertisement

அன்னுார்:அத்திக்கடவு திட்ட நீரேற்று நிலையத்திற்கு அன்னுாரில் அலுவலகம் தயாராகியுள்ளது.அவிநாசி - அத்திக்கடவு திட்டத்திற்கான பணிகள் வேகமாக நடந்து வருகிறது. பவானி அருகே, பவானி ஆற்று நீர் எடுக்கப்பட்டு, ஆறு நீரேற்று நிலையங்கள் வழியாக, ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் உள்ள குளம், குட்டைகளில் நீர் நிரப்பும் வகையில் இந்த திட்ட பணிகள் நடந்து வருகிறது.ஆறாவது நீரேற்று நிலையம், அன்னுார் அருகே குன்னத்தூராம் பாளையத்தில் அமைய உள்ளது. இதற்காக அங்கு புதிய போர்வெல் போடப்பட்டுள்ளது. நீரேற்று நிலைய கட்டுமான பணிகளுக்காக அலுவலகம் அமைக்கும் பணி கடந்த மாதம் துவங்கியது. பணி முடிந்து தற்போது அலுவலகம் தயார் நிலையில் உள்ளது.கட்டுமானப் பணியில் பயன்படுத்துவதற்காக, இரண்டு சிறிய அளவிலான தண்ணீர் தொட்டிகள் கட்டப்பட்டு, தயார் நிலையில் உள்ளன. நீரேற்று நிலையத்தின் கட்டுமான பணி விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X