பொது செய்தி

தமிழ்நாடு

கோமாரி தடுப்பூசி; கால்நடைத்துறை தீவிரம்

Added : மார் 23, 2020
Share
Advertisement

அன்னுார்:அன்னுார் வட்டாரத்தில், அன்னுாரில் கால்நடை மருத்துவமனையும், எல்.கோவில்பாளையம், அல்லப்பாளையம், பொங்கலூர், பொன்னே கவுண்டன்புதூர், கணேசபுரம் ஆகிய ஐந்து இடங்களில் கால்நடை மருந்தகங்கள் உள்ளன.வட்டாரத்தில், 16,700 கால்நடைகள் உள்ளன. இதற்காக தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்தக் குழுக்கள் தினம் ஒரு கிராமம் என தேர்வு செய்து, தடுப்பூசி போட்டு வருகிறது. இதுவரை, 40 சதவீதம் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு விட்டன.பொன்னே கவுண்டன் புதூர் கால்நடை மருத்துவர் சதீஷ்குமார் கூறுகையில், "கால்நடை வளர்ப்போர் தங்கள் பகுதியில் உள்ள கால்நடை மருந்தகங்களை தொடர்பு கொண்டு, தங்கள் கிராமத்திற்கு குழு வரும் தேதியை தெரிந்து, தங்கள் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி தவறாமல் போட்டுக் கொள்ள வேண்டும்" என, தெரிவித்தார்.அன்னுார் பேரூராட்சி பகுதியில் கால்நடை மருத்துவர் ஆர்க்கிமிடீஸ் தலைமையில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு, தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X