பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா ஒழிக்க ஆதரவு வீடுகளில் முடங்கினர் மக்கள்

Added : மார் 23, 2020
Share
Advertisement
 கொரோனா ஒழிக்க ஆதரவு வீடுகளில் முடங்கினர் மக்கள்

அன்னுார், பெரியநாயக்கன்பாளையம், துடியலுார் வட்டாரத்தில், நேற்று அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. பொதுமக்கள் வீடுகளில் முடங்கி கிடந்தனர்.'கொரோனா'பரவுவதை தடுப்பதற்காக, 22ம் தேதி காலை 7:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை, மக்கள் வெளியில் நடமாடாமல், தங்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு பிரதமர் மோடி கோரிக்கை விடுத்திருந்தார். தமிழக முதல்வரும் இதற்கு அழைப்பு விடுத்திருந்தார்.
அதன்படி அன்னுார் வட்டாரத்தில், பெட்டிக்கடை, மளிகை கடை, ஓட்டல், பேக்கரி, மொபைல் ஷாப், பேன்சி உள்ளிட்ட அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. சினிமா தியேட்டர்கள் செயல்படவில்லை. ஸ்பின்னிங் மில், பவுண்டரி, தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன.பெட்ரோல் பங்க்களும், மருந்து கடைகளும் வழக்கம் போல் செயல்பட்டன, பிரசித்திபெற்ற, அன்னுார் மன்னீஸ்வரர் கோவில், கரிவரதராஜ பெருமாள் கோவில் ஆகியவை மூடப்பட்டிருந்தன. இரு சக்கர வாகனங்களின் இயக்கம் குறைந்த அளவில் இருந்தது. பஸ், லாரி, கார் ஆகியவற்றின் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது. போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் ரோந்து சுற்றி வந்தனர். அரசு போக்குவரத்து கழக கிளை அலுவலகத்தில், 58 பஸ்கள் உள்ளன.
இவை அனைத்தும் நேற்று இயங்கவில்லை. போக்குவரத்து கிளை மூடப்பட்டிருந்தது.பெ.நா.பாளையம்: துடியலுாரில் சில பகுதிகளில் அதிகாலை, 5.00 மணிக்கு சில இறைச்சிக் கடைகள் திறந்து இருந்தன. காலை, 6.30 மணி வரை செயல்பட்ட கடைகள் ஏழு மணிக்கு பிறகு மூடப்பட்டன. சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்திருந்தது. சில இரு சக்கர வாகனங்கள், கார்கள் மட்டும் சென்றன. சுப்பிரமணியம் பாளையம் பிரிவு, துடியலுார், நரசிம்மநாயக்கன்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், பிரஸ் காலனி, வீரபாண்டி பிரிவு உள்ளிட்ட முக்கிய சந்திப்புகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.ஒரு சில மருந்து கடைகள் திறந்திருந்தன.
தனியார் தொழிற்சாலைகளுக்கு ஏற்கனவே விடுப்பு அறிவிக்கப்பட்டிருந்ததால், அனைத்தும் மூடப்பட்டிருந்தன. சாலைகளில் நடமாடிய சிலரை போலீசார் அழைத்து கொரோனா தீவிரத்தை விளக்கி, தனித்திருக்கும்படி அறிவுரை கூறி, அனுப்பி வைத்தனர்.சின்னதடாகம், பெரிய தடாகம், சோமையனுார், நஞ்சுண்டாபுரம், ஆனைகட்டி உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் செங்கல் சூளைகள், லாரிகள் இயக்கப்படவில்லை. சில தன்னார்வ அமைப்பினர் சாலையோரம் உள்ள ஆதரவற்றவர்களுக்கு சாப்பாடு பொட்டலங்கள் மற்றும் குடிநீரை வழங்கினர். --நமது நிருபர்-

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X