வளசரவாக்கம் : மக்கள் ஊரடங்கு காரணமாக, வடபழநி கோவிலில், 10 பேருடன் திருமணம் நடந்தது.பிரதமரின் வேண்டுகோளிற்கு இணங்க, நாடு முழுவதும், நேற்று மக்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது.
இதையடுத்து, போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. மக்கள் வீடுகளிலேயே இருந்ததால், சென்னை மாநகரம் வெறிச்சோடியது.ஏற்கனவே திட்டமிட்டபடி, திருமணங்கள் நிகழ்வு நடந்தன. ஆனால், வழக்கத்திற்கும் மாறாக, மிக குறைந்த எண்ணிக்கையிலேயே உறவினர்கள் பங்கேற்றனர்.வளசரவாக்கம், ஆற்காடு சாலையில் உள்ள திருமண மண்டபத்தில், நாகை மாவட்டத்தைச் சேர்ந்த கஜேந்திரன் மற்றும் சுஷ்மா ஆகியோரின் திருமணம், 30க்கும் மேற்பட்ட உறவினர்கள் மத்தியில் எளிமையாக நடந்தது.
'மக்கள் ஊரடங்கு மத்தியில் நடந்த திருமணம், வித்தியாசமான உணர்வு' என, மணமக்கள் தெரிவித்தனர்.இது குறித்து மணமகனின் சகோதரர், கண்ணன் என்பவர் கூறுகையில், ''திருமணம் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது. அதற்கு பின், மக்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. ''இதனால், மண்டபம் திறக்கப்படுமா, திருமணம் நடப்பதில் தடை ஏற்படுமா என்ற பதற்றம் இருந்தது. தினமும் வந்து மண்டப நிர்வாகிகளிடம் விசாரித்து வந்ேதாம்,'' என்றார்.இதேபோல், நெற்குன்றத்தைச் சேர்ந்த, மகேஸ்வரி - சூர்யா ஆகியோருக்கு, வடபழநி ஆண்டவர் கோவில் முன், உறவினர்கள், 10 பேருடன் திருமணம் நடந்தது.
பத்திரிகை கொடுத்து அழைத்த உறவினர்களை, முன்னெச்சரிக்கை கருதி வர வேண்டாம் என்றோம். மார்ச், 31ம் தேதிக்கு பின், வரவேற்பு நிகழ்ச்சியில் உறவினர்களை அழைத்துள்ளோம் என, மணமக்கள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE