பொது செய்தி

தமிழ்நாடு

ஆளரவமின்றி காட்சியளித்த வடசென்னை

Added : மார் 23, 2020
Share
Advertisement

திருவொற்றியூர் : வடசென்னையில், 100 சதவீதம் சுய ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டதால், தெருக்கள், பிரதான சாலைகள், நெடுஞ்சாலை, விரைவு சாலைகள், சந்தைகள் வெறிச்சோடின. எண்ணுார், திருவொற்றியூர், மணலி, தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, காசிமேடு, பாரிமுனை, வியாசர்பாடி என, வடசென்னை முழுவதும், 100 சதவீதம் மக்கள் வீடுகளை வெளியேறவில்லை எண்ணுாரில், கத்திவாக்கம் பஜார், தாழங்குப்பம் மீன் மார்க்கெட், விம்கோ மார்க்கெட், எர்ணாவூர் மார்க்கெட், எண்ணுார் பேருந்து நிலையம் ஆகியவை முற்றிலும் இயங்கவில்லை திருவொற்றியூரில், பேருந்து நிலையம், மார்க்கெட், தேரடி, காலடிப்பேட்டை மார்க்கெட் போன்ற சந்திப்புகள் முடங்கின

திருவொற்றியூர் நெடுஞ்சாலை, எண்ணுார் விரைவு சாலை, மணலி விரைவு சாலை, பொன்னேரி நெடுஞ்சாலை என, வடசென்னையின் அனைத்து முக்கிய சாலைகள் போக்குவரத்தின்றி மயான அமைதி நிலவியது மணலி, காமராஜர் சாலையில் உள்ள, மார்க்கெட்டில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டதால், ஆள்நடமாட்டம் இல்லை காசிமேடு மீன் சந்தை, வண்ணாரப்பேட்டை துணிக்கடைகள் மூடல் காரணமாக, அப்பகுதியில், 100 சதவீதம், மக்கள் சுய ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது பர்மா பஜார், பாரிமுனை, கொத்தவால்சாவடி, பூக்கடை போன்ற மக்கள் நெரிசல் மிகுந்த பகுதிகள், ஆள் அரவமின்றி காட்சியளித்தது.

சென்ட்ரல் மூர் மார்க்கெட், தண்டையார்பேட்டை நேதாஜி நகர் மார்க்கெட்டுகளில், ஒரு கடைகள் கூட திறக்கப்படவில்லை காசிமேடு முதல் எண்ணுார் வரையிலான, பெரும்பாலான மீனவ கிராமங்களில் இருந்து, மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல், படகுகளை கரையில் நிறுத்தி வைத்து, ஊரடங்கில் பங்கேற்றனர் தொழில் நகரமாக விளங்கும், மணலி, எண்ணுார், திருவொற்றியூர் போன்ற பகுதிகளில், பெரிய, சிறு, குறு தொழிற்சாலைகள் முற்றிலுமாக மூடப்பட்டு, தொழிலாளர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X