பொது செய்தி

தமிழ்நாடு

நிசப்தமான வானகரம் மார்க்கெட்

Added : மார் 23, 2020
Share
Advertisement

மதுரவாயல் : ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் கடல் அலைமோதும், வானகரம் மீன் மார்க்கெட், நிசப்தமாக காட்சியளித்தது.

மதுரவாயல் அடுத்த வானகரத்தில், மீன் சந்தை அமைந்துள்ளது. இங்கு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, மீன்கள் கொண்டு வரப்படுகிறது.ஞாயிறு, புதன் ஆகிய இரண்டு நாட்களில், மீன்கள் வரத்து அதிகமாக இருக்கும்.இதனால், ஞாயிறு தோறும், அதிகாலை முதல் மதியம் வரை, மீன் மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அலைமோதும். இதனால், அப்பகுதி போக்குவரத்து நெரிசலுடன் காணப்படும்.நேற்று மக்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டதால், மீன் மார்க்கெட்டுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வெறிச்சோடி காணப்பட்டது.

இது குறித்து மீன் மார்க்கெட் நிர்வாகி ஜோதி குமார் கூறுகையில், ''ஞாயிற்றுக்கிழமையில், மீன் மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். அன்று மட்டும், 1 கோடி ரூபாய்க்கு மேல் வியாபாரம் நடைபெறும். தற்போது, வியாபாரம் குறைந்துள்ளது.''மக்கள் ஊரடங்கை கடைப்பிடிக்கும் விதமாக, நேற்று மார்க்கெட்டிற்கு விடுமுறை அளிக்கப்பட்டது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X