நிலக்கரி ஏற்றி வந்த கப்பலில் சிப்பந்தி மாயம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நிலக்கரி ஏற்றி வந்த கப்பலில் சிப்பந்தி மாயம்

Added : மார் 23, 2020
Share

மீஞ்சூர், : ஒடிசாவில் இருந்து, நிலக்கரி ஏற்றி வந்த கப்பலில் இருந்த சிப்பந்திகளில் ஒருவர் காணாமல் போனதாக வந்த புகாரின்படி, போலீசார் விசாரிக்கின்றனர்.

சென்னை, ராஜாஜி சாலையில் உள்ள மத்திய அரசின், 'தி ஷிப்பிங் கார்ப்பரேஷன் இந்தியா லிமிடெட்' என்ற நிறுவனத்திற்கு சொந்தமானது, 'விஷ்வ விஜய்' என்ற கப்பல்.இந்த கப்பல், கடந்த, 13ம் தேதி காலை, 8:00 மணிக்கு, ஒடிசா மாநிலத்தின், பாராதீப் துறைமுகத்தில் இருந்து, நிலக்கரி ஏற்றிக் கொண்டு,எண்ணுார் துறைமுகத்திற்கு புறப்பட்டது.கேப்டன் முகேஷ்குமார் மற்றும் 26 சிப்பந்திகள் கப்பலில் இருந்தனர்.கடந்த, 14ம் தேதி நள்ளிரவு முதல், கப்பலில் பணிபுரிந்து வந்த உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இயந்திர பிரிவு முதன்மை அதிகாரி நரேஷ்குமார், 59, என்பவர் காணாமல் போனார்.

இது குறித்து, இ- - மெயில் மூலம், கப்பல்நிறுவனத்திற்கும், மத்திய கடலோர காவல்படைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.மேற்கண்ட கப்பல், 19ம் தேதி, எண்ணுார் துறைமுகம் வந்தடைந்தது, கப்பல் முழுமையாக சோதனையிடப்பட்டதில், நரேஷ்குமார் கப்பலில் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.இது தொடர்பாக, மேற்கண்ட கப்பல் நிறுவனத்தின் மேலாளர் பாரிவள்ளல், 40, மீஞ்சூர் காவல் நிலையத்தில், நேற்று புகார் ஒன்றை கொடுத்தார். அதன்படி, போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X