பொது செய்தி

தமிழ்நாடு

ஆசை இருக்குது; அரசு அறிவிப்பு இல்லை நெரிசல் தீரணும்!அன்னூர் சுற்று வட்டார மக்கள் ஏமாற்றம்

Added : மார் 23, 2020
Share
Advertisement

அன்னுார்:சட்டசபையில், நெடுஞ்சாலை மானிய கோரிக்கை விவாதத்தில், கிழக்கு புறவழிச்சாலை குறித்த அறிவிப்பு வெளியாகாததால், அன்னுார் மக்கள் ஏமாற்றத்துக்கு ஆளாகியுள்ளனர்.கோவை சத்தி தேசிய நெடுஞ்சாலைக்கும், மேட்டுப்பாளையம் அவிநாசி மாநில நெடுஞ்சாலைக்கும் அன்னுார் மையமாக உள்ளது.
தமிழகத்தின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதியிலிருந்து, சுற்றுலாத் தலங்களான ஊட்டி, குன்னுார், கோத்தகிரி செல்லும் வாகனங்கள், அன்னுார் வழியாக செல்கின்றன.அன்னுாரின் தெற்குப் பகுதியில், பவுண்டரி கிளஸ்டர் அமைக்கப்பட்டதால், புதிய குடியிருப்புகள் உருவாகியுள்ளன. வெளி மாவட்டம், வெளி மாநிலங்களை சேர்ந்த பல ஆயிரம் தொழிலாளர்கள் இங்கு பணிபுரிகின்றனர். வாகனங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து உள்ளது. ஆனால் அதற்கு ஏற்ப சாலை வசதி விரிவுபடுத்தப்படவில்லை. இதனால் அன்னுார் மக்கள் பல ஆண்டுகளாக கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கின்றனர்,வாரச்சந்தை நடக்கும் சனியன்றும், முகூர்த்த நாட்களிலும், வாகனங்கள் நான்கு ரோடுகளிலும், 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு வரிசையில் நிற்கின்றன, தினமும் காலை, மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதற்கு தீர்வாக, கிழக்கு மற்றும் மேற்கு புறவழிச் சாலைகள் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள், 20 ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இத்தொகுதி எம்.எல்.ஏ.,வும், சபாநாயகருமான தனபால் முயற்சியால், தமிழக அரசு கிழக்கு புறவழிச் சாலையை 2017ல் அறிவித்தது.இதில் கோவையிலிருந்து அன்னுார் வரும் வழியில் கரியாம்பாளையத்தில் துவங்கி சொக்கம்பாளையம் வழியாக அவிநாசி ரோட்டில் சோமனுார் பிரிவில், கடந்து சக்தி ரோட்டை அண்ணாநகரில் சென்று சேரும்படி புறவழிச்சாலை திட்டமிடப்பட்டது. இதற்காக 110 கோடி ரூபாய் மதிப்பிடப்பட்டது.இதில் சர்வே செய்யப்பட்டு, எடுக்கப்பட வேண்டிய நிலங்கள் குறித்து, 2018 ஆகஸ்ட்டில் அறிவிப்பும் வெளியானது. நிலம் கையகப்படுத்த அலுவலரும் நியமிக்கப்பட்டார். ஆனால், புறவழிச்சாலையால் பாதிக்கப்படும் விவசாயிகளும், பொதுமக்களும், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இந்நிலையில் ஒன்றரை ஆண்டாக திட்டம் தொடர்பாக எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை. மாநில நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் இதுகுறித்து கேட்டால் மழுப்பலான பதிலே அளிக்கின்றனர்.சபாநாயகர் தனபால் கடந்த மாதம் அன்னுார் வந்த போது, 'புறவழிச்சாலை பணி விரைவில் துவங்கும்' என்று தெரிவித்தார்.
இதையடுத்து பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகவில்லை. நெடுஞ்சாலைத்துறை மானிய கோரிக்கை விவாதத்தின் முடிவிலானது அறிவிப்பு வெளியாகும் என்று அன்னுார் மக்கள் எதிர்பார்த்தனர். அப்போதும் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இது அன்னுார் மக்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.நிலம் கையகப்படுத்த அலுவலர் நியமித்து, நில உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கி, ஒன்றரை ஆண்டுகளாகியும், அதற்கு அடுத்த கட்ட பணி தொடங்காமல் திட்டம் முடங்கிக் கிடக்கிறது. சபாநாயகர் தனபால் இதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்று அன்னுார் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X