ஷாகீன் பாக் போராட்டம் பெட்ரோல் குண்டு வீச்சு

Added : மார் 23, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

புதுடில்லி: டில்லியின் ஷாஹீன் பாக் பகுதியில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடுவோர் மீது, நேற்று, பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன.
டில்லி ஷாஹீன் பாக் நகரில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, மூன்று மாதங்களுக்கும் மேலாக, பெண்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த பகுதியில், நேற்று அடையாளம் தெரியாத நபர் பெட்ரோல் குண்டுகளை வீசியதாக, போலீசார் தெரிவித்தனர். இதில், யாரும் காயம் அடையவில்லை.
அங்கிருந்து, பெட்ரோல் நிரப்பிய ஆறு பாட்டில்களை, போலீசார் கைப்பற்றினர். இதற்கிடையே, டில்லியில், ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலையின் ஏழாவது கேட் பகுதியில், குடியுரிமை திருத்த சட்டத்தை எதித்து, மாணவர்கள் தொடர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வந்தனர். கொரோனா வைரஸ் தீவிரம் காரணமாக, இந்த போராட்டம் நிறுத்தப்பட்டது. ---
ஜார்ஜியாவில் இருந்து திரும்பியதால் தனிமையில், 'பாகுபலி' பிரபாஸ்
ஐதராபாத்: பாகுபலி திரைப்பட நடிகர் பிரபாஸ், ஜார்ஜியா நாட்டில் நடைபெற்ற படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இந்தியா திரும்பிய அவர், கொரோனா வைரசை தடுக்கும் வகையில், வீட்டில் தனிமையில் இருக்க போவதாக அறிவித்துள்ளார். இது குறித்து, அவரது, 'டுவிட்டர்' பதிவில், 'வெளிநாட்டில் இருந்து வந்துள்ளதால், நான் சுயமாக தனிமைப்படுத்த முடிவு செய்துள்ளேன். நீங்களும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவீர்கள் என, நம்புகிறேன்' என, கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பெரிய ராசு - தென்காசி ,இந்தியா
23-மார்-202011:49:27 IST Report Abuse
பெரிய ராசு பத்தாது கொரனவை விட மிக கொடிய விஷக்கிருமிகளை இந்த தீவிரவாதிகள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X