விழிப்புணர்வு பிரசாரம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விழிப்புணர்வு பிரசாரம்

Added : மார் 23, 2020
Share

அன்னுார்:அன்னுார் பஸ் ஸ்டாண்டில், கை கழுவுவது குறித்தும், கொரோனா வைரஸ் குறித்தும் வாலிபர் சங்கத்தினர் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க, அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில், நேற்று முன்தினம் மாலை அன்னுார் பஸ் ஸ்டாண்டில், நான்கு குழாய்கள் அமைந்த தொட்டியை வைத்து, அதன் மூலம் பொதுமக்களுக்கு லைசால் கரைசல் கொடுத்து கைகளை கழுவும் படி செய்தனர். கைகளை 30 வினாடிகள் எப்படி முழுமையாக கழுவ வேண்டும் என்பதை செயல் விளக்கம் செய்து காண்பித்தனர்.இத்துடன் வைரஸ் பரவாமல் இருக்க செய்யவேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வாலிபர் சங்க நிர்வாகிகள் வழங்கினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X