சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நாளை விசாரணைக்கு வருகிறது

Added : மார் 23, 2020
Share
Advertisement

சென்னை : சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள, 'லுாப்' சாலை - பெசன்ட்நகரை இணைக்கும் வகையில் சாலை அமைப்பதற்கு, விரிவான திட்ட அறிக்கை தாக்கல் செய்ய, மாநகராட்சிக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மீனவர்களின் வாழ்வாதார பாதுகாப்புக்கு, 'முராரி' குழு பரிந்துரைத்த திட்டங்களை அமல்படுத்தவும், மெரினா கடற்கரையில் கடைகள், மீன் வியாபாரத்தை ஒழுங்குபடுத்தவும் கோரி, உயர் நீதிமன்றத்தில் மனுக்கள்தாக்கல் செய்யப்பட்டிருந்தன.இம்மனுக்கள், நீதிபதிகள், வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. கடற்கரை லுாப் சாலையில், 2 ஏக்கரில் அமைய உள்ள மீன் சந்தையின் நிலை குறித்து அறிக்கை அளிக்கவும், பெசன்ட்நகரில் இருந்து லுாப் சாலையை இணைக்கும் சாலை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயவும் உத்தரவிட்டது.வழக்கு, 19ம் தேதி விசாரணைக்கு வந்த போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:மாநகராட்சி தரப்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல், எஸ்.ஆர்.ராஜகோபால் ஆஜராகி, கடற்கரையில் வியாபாரம் செய்ய, தள்ளு வண்டி கடைகள் ஒதுக்கீடு தொடர்பாக, மாநகராட்சியின் கருத்தை பெற்று தெரிவிப்பதாகவும், அதற்கு அவகாசம் அளிக்கவும் கோரினார்.

மெரினா லுாப் சாலையில், கடற்கரை பகுதியையும், மீன் சந்தையையும் இணைக்கும் நடைபாதை மேம்பாலம் குறித்து, சென்னை ஐ.ஐ.டி.,யிடம் விரிவான திட்ட அறிக்கை பெற்று சமர்ப்பிப்பதாக, கூடுதல் அட்வகேட் ஜெனரல் தெரிவித்தார். அதற்கு, நான்கு வார அவகாசம் வழங்கப்படுகிறது.லுாப் சாலையையும், பெசன்ட் நகரையும் இணைக்கும் சாலைக்கு, கொள்கை அளவில் மாநகராட்சி ஒப்புக் கொண்டுள்ளது. திட்டத்தின் அவசியம் பற்றியும், சாத்தியக்கூறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தனிப்பட்ட ஏஜன்சியிடம் இருந்து, விரிவான திட்ட அறிக்கை பெற, நான்கு வார அவகாசம் வழங்கப்படுகிறது.

மீனவர்கள் சிலர் சார்பில், வழக்கறிஞர் யோகேஸ்வரன் ஆஜராகி, இந்த திட்டத்துக்கு ஆட்சேபனை தெரிவித்தார். முதலில், விரிவான திட்ட அறிக்கை தாக்கல் செய்யட்டும். இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். தள்ளி வைக்கப்பட்ட விசாரணை, நாளை நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X