வன விலங்குகள் தாகம் தீர்க்க தீவிரம்: குடியிருப்புகளுக்குள் வருவதை தடுக்க முயற்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வன விலங்குகள் தாகம் தீர்க்க தீவிரம்: குடியிருப்புகளுக்குள் வருவதை தடுக்க முயற்சி

Added : மார் 23, 2020
Share
பெ.நா.பாளையம்:வனவிலங்குகள் மலையோர கிராமங்களுக்குள் புகுவதை தடுக்க, வனப் பகுதியில் கட்டப்பட்டுள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணியை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.கோவை கோட்ட வனப்பகுதி, 690 ச.கி மீட்டர் பரப்பளவு கொண்டது. இதில், கோவை, மதுக்கரை, போளுவாம்பட்டி, பெரியநாயக்கன்பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகை ஆகிய வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானைகள், புலி,
 வன விலங்குகள் தாகம் தீர்க்க தீவிரம்: குடியிருப்புகளுக்குள் வருவதை தடுக்க முயற்சி

பெ.நா.பாளையம்:வனவிலங்குகள் மலையோர கிராமங்களுக்குள் புகுவதை தடுக்க, வனப் பகுதியில் கட்டப்பட்டுள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணியை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.கோவை கோட்ட வனப்பகுதி, 690 ச.கி மீட்டர் பரப்பளவு கொண்டது. இதில், கோவை, மதுக்கரை, போளுவாம்பட்டி, பெரியநாயக்கன்பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகை ஆகிய வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானைகள், புலி, சிறுத்தை, காட்டு மாடு, மான், கரடி, உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசிக்கின்றன.மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில், 400க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் நிரந்தரமாக வசிக்கின்றன. இவை, அவ்வப்போது வனப்பகுதியில் இருந்து மலையோர கிராமங்களுக்குள் புகுந்து விடுகின்றன. கிராமங்களில் உள்ள தென்னை, வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்துகின்றன. மீண்டும் அதிகாலை காட்டுக்குள் திரும்புவதை வழக்கமாக கொண்டுள்ளன.குறிப்பாக கோடை காலத்தில் தண்ணீர் தேடி கிராமங்களை நோக்கி காட்டுயானைகள் வரும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதை தடுக்க, வனப்பகுதிகளில் கட்டப்பட்டுள்ள தண்ணீர் தொட்டிகளில் எப்போதும் தண்ணீர் நிரம்பி இருக்கும்படி வனத்துறையினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.கோவை கோட்ட வனப்பகுதியில் மட்டும், 70க்கும் மேற்பட்ட தண்ணீர் தொட்டிகள் உள்ளன. கோடை வெயில் சுட்டெரிப்பதை முன்னிட்டு, இந்த தொட்டிகளில் தண்ணீர் நிரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்துகுட்பட்ட பாலமலை, நாயக்கன்பாளையம், கோபனாரி, ஆனைகட்டி, தோலம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், 16 தண்ணீர் தொட்டிகள் உள்ளன. இதில், போதுமான அளவு தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இது குறித்து, பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக அலுவலர் சுரேஷ் கூறியதாவது:பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்தில் வன விலங்குகளின் தாகம் தீர்க்க, 16 தண்ணீர் தொட்டிகள் உள்ளன. இவை முறையே வாரம் ஒருமுறை தூய்மை செய்யப்பட்டு, பராமரிக்கப்பட்டு, புதிதாக தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது. ஒவ்வொரு தண்ணீர் தொட்டிக்கு அருகேயும் ஆழ்குழாய் கிணறு வசதி உள்ளது. இதனால் அந்தந்த பகுதியில் பணியில் உள்ள வனத்துறை ஊழியர்கள் அவ்வப்போது கண்காணித்து தண்ணீர்விடும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, யானைகள் தூய்மையான தண்ணீரை மட்டுமே அருந்தும் பழக்கம் உடையது என்பதால் தண்ணீரில் பிற வனவிலங்குகளின் எச்சங்கள் கலக்காமல் கவனித்து வருகின்றனர்.வாரம் ஒருமுறை தொட்டியை தூய்மையாக கழுவி, தண்ணீர் விடும் பணியை செய்து வருகின்றனர். தற்போது, கோடை காலம் என்பதால் தண்ணீர் தொட்டியில் உள்ள நீர் வேகமாக ஆவியாகிவிடும். தினந்தோறும் தண்ணீர் தொட்டியை கண்காணிக்கும் பணியை வனத்துறை ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு, சுரேஷ் தெரிவித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X